பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 337 பயன்பட்டது! கீழ் பவானி அணையினால், ஏறக் குறைய இரண்டு இலட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் வளம் பெற்றன. சேலம் மேட்டுர்கால்வாய் மூலமாக, 45ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனப் பயன்பெற்றன! கிருஷ்ணகிரி நீர்த் தேக்கத்திட்டம், வைகை, சாத்தனூர் திட்டங்கள் தர்மபுரி, மதுரை, வடாற்காடு மாவட்டங்களை வளப் படுத்திய நீர்ப் பாசனங்களாகும். பரம்பிக்குளம், ஆளியாறு திட்டத்திற்காக, தலைவர் காமராஜ் ஆட்சியில் 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, கோவை மாவட்டத்தைப் பசுமைப் புரட்சியிலே ஈடுபடச் செய்தது. தமிழக விவசாயிகளுக்குக் கிணறுகள் வெட்டிட நீண்ட காலத் தவணைக் கடன்களும், 25 ஆயிரம் சதவிகித மான்யமும் அளிக்கப்பட்டது. விவசாயப் பெருமக்களுக்குரிய நில இடு பொருட்களும் - நிதி உதவியும் எளிதாகக் குறைந்த வட்டியில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளைக் காமராஜர் அவர்கள் ஏற்படுத்தினார். அதற்குக் கூட்டுறவு இயக்கத்தைத் தேர்வு செய்தார்தலைவர்: இவர் காலத்தில் தான் கூட்டுறவு இயக்கம் வேரூன்றியது. 'தன் நலம் பாராமல் கூட்டுறவு இயக்கத்தில் விவசாயம் செய்பவர்கள் ஈடுபட வேண்டும்' என்று தலைவர் காமராஜ் வற்புறுத்தினார். வடாற் காடு மாவட்டத்தில் ஒருமுறை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது அவர் ஊர்ஊராகச் சென்றார். பொதுக்கூட்டங்கள் சில ஊர்களிலே நடத்தி, அக்கூட்டங்களிலே தலைவர் தனது திட்டங்களால் ஏற்படும் நன்மைகளையும், அவற்றைப் பயன்படுத்தும்திட்டமுறைகளையும் பாமரமக்களுக்குப் புரியும் படி பேச்சு வழக்கிலேயே எடுத்துரைத்தார். வடாற்காடு மாவட்டத்தின்ஒர் ஊரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தலைவர் காமராஜர் மேடையில் அமர்ந்து கொண்டே எதிரே உள்ள ஏழை மக்களைப் பார்த்து, 'உங்களிலே ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலமுடையவர்கள் யார் யார்? என்று கேட்டார். ஒர் ஏக்கர் நிலமுள்ள விவசாயி ஒருவர் எழுந்தார். அவரைத் தலைவர் அருகே அழைத்துத் தட்டிக் கொடுத்து, உங்களிடமுள்ள நிலம் எவ்வளவு என்றார்? 'ஒரே ஏக்கர்தானுங்க" என்றார் விவசாயி! 'அதிலே எவ்வளவு நெல் விவசாயம் செய்வீங்க என்றார் தலைவர் 'பத்து மூட்டை நெல் கிடைக்குங்க” என்றார் விவசாயி!