பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 தேசியத் தலைவர் காமராஜர் 'உரம் போட்டா, போடாமலா உங்களுக்கு அந்த நெல் கிடைப்பது' என்றார் முதல்வர். 'உரம் போடாமத் தானுங்க" 'உரம்போடாமல் இவ்வளவு கிடைக்கறதுன்னா; போட்டா எம்முட்டு கிடைக்குமுன்னே!" உரம் போட்டு நல்லா ஒழைச்சா ஏக்கருக்கு இருபது மூட்டை நெல் வருமூங்க". ஆனால் உரம் வாங்க பணத்துக்கு எங்கே போவேங்க என்று இழுத்தார் விவசாயி. தலைவர் காமராஜ் அவர்கள் சிரித்துக்கொண்டே, எவ்வளவு பணம் வேண்டியிருக்கும்னே என்றார். ஒருநுத்தம்பது அல்லது இருநூறு ரூபாய் இருந்தாபோதுமுங்க, நல்லா மகசூல் காணுங்க என்றார் விவசாயி. மறுபடியும் தலைவர் அந்த ஏழை மகனைத் தட்டிக் கொடுத்து சிரித்தபடியே 'சர்க்கார் இங்கே கடன் கொடுக்கறாங்களா? இல்லையா? அதை என்ன செய்யlங்கன்னே' என்று கேட்டார். உடனே விவசாயி, நானல்லாம் கடன்வாங்கறதில்லிங்க. அதை வாங்க ரொம்ப கஷ்டப்படம்னுங்க, என்றார். இனிமே சர்க்கார் கடன்கொடுக்க ஏற்பாடு செய்றேன்னே, என்ன புரிஞ்சுதாங்கறே. அந்தப் பணமும் எந்தக் கஷ்டமும் நீங்கப் படாமே நேரடியா உங்களுக்கே கிடைக்கச் செய்யறேன். அப்படிச் செய்தா அதிகமாக பத்து மூட்டை நெல் கிடைக்கும் இல்லையா? அதைச்சர்க்காருக்கே விற்பனை செய்வீங்களா? என்று கேட்டார்தலைவர் விவசாயிடம்! எந்த முதலமைச்சர் தனது மக்களை இவ்வாறு வலிய அழைத்துப் பேசி அமைதியாக அளவளாவி - அக்கறையுள்ள வழிமுறைகளைக் கூறி ஊக்கமூட்டி, சர்க்கார் கடன்களைச் சொன்னபடி அவருக்குச் சேர்த்தார் ? எந்த முதலமைச்சர் காலத்தில் விவசாயத்திற்காக இவ்வளவு ஊர்களில், ஆறுகளில் நீர்ப்பாசனத் திட்டங்களை அவரவர் ஆட்சியில் செய்து முடித்தார்? மக்கள் சிந்திக்க வேண்டிய மகத்தான மனிதாபிமான நன்றியுணர்வுப் பணிகளல்லவா இவை? மானாவாரியாக ஆங்காங்கே கிடக் கும் நிலங்களைப் பெற்றுள்ள உழவர் பெருமக்களுக்கு ஆயில் எஞ்சின்கள், மின்சார பம்பு செட்டுக்கள் தவணை முறைகளில் கடனாகக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தவர் முதல்வர் காமராஜ்! தலைவர் காமராஜர் ஆட்சியிலே 150 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யும் நிலங்களாகத் தகுதிபெற்றன. இதில் 56