பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 21 அதனால் கப்பூலோட்டிய தமிழன் வ.உ.சி, அமரகவி பாரதியார், தியாகி சுப் பிரமணிய சிவா, வ.வே. சு. ஐயர், திரு.வி.கலியாண சுந்தரனார் போன்ற மேதைகளோடு சேர்ந்து பணியாற்றும் காங்கிரஸ் கட்சிப் பணியாளர் இவர் எந்தச் சாதிக்காரன் அவர் வீட்டிற்கு வந்தாலும், 'முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி உணவு படைத்து, அவர்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் இலவசமாக நடத்திக் கொடுக்கும் இயல்பு படைத்தவர். கங்கை காவிரி இணைப்புத் திட்டம் கங்கை - காவிரி ஆறுகளைத் தேசிய அளவில் இணைக்க வேண்டும் என்ற தனது நோக்கை அவர் தலைமையேற்ற கவுகத்தி மாநாட்டில் வலியுறுத்தினார் அவர் வடநாடு செல்லும் போதெல்லாம், அந்தப் பகுதி வாழ் முக்கிய தலைவர்களிடம் தேசிய நீர்ப்பாசனத் திட்டத்தைப் பற்றி விளக்கி விரிவாக வாதாடுவார். காந்தியடிகள் தமிழ்நாடு வருகைதரும்போது, இவர்இல்லத்தில் தங்கி மகிழ்ந்தார் காங்கிரஸ்காரர்களிடையே குழு சர்ச்சைகள்; கொள்கைத்தகராறுகள் எழுந்து மோதும்போதெல்லாம், அவற்றைக் காந்தியடிகள் முன்னாலேயே வழக்குரைக்கும் வீடு இவர் வீடு! இந்து முஸ்லிம் இணைப்புக்கும், இரு இன ஒற்றுமைகளுக்கான இன்றியாமைக்கும் அரும் பாடு பட்டவர் திரு. ஐயங்கார் என்றால் மிகையாகாது. பாகிஸ்தான் பிரிவினை ஏற்படக்கூடாது என்ற எதிர்ப்பு எண்ணம் இவரிடையே இருந்ததால், திரு. காந்தியடிகளுக்கும் திரு. ஐயங்காருக்கும் கொள்கை ஒற்றுமை மட்டுமல்ல, ஒர் ஆன்ம ஞான இதய இணைப்பும் இருந்தது. காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு மது விலக்கு, சாதி, மத, பேத எதிர்ப்புகளைப் பற்றி, அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் அவர் முழக்கமிட்டார். அண்ணல் காந்தியடிகளின் கதர்ப் பிரசாரத்திற்கு முன்னோடியாக முனைந்து பிரசாரம் புரிந்தார்.