பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 339 இலட்சம் ஏக்கரா நிலங்கள், நிலையான நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றன என்றால், இந்தக் காலம், அதாவது காமராசர்ஆட்சி செய்த காலம், எல்லாத்துறைகளிலும் பொற்காலமாகத் திகழவில்லையா? நெஞ்சிலே கை வைத்து, இன்றுவரை நடந்த ஆட்சியை ஆய்வோர்களுக்கு மட்டுமே - பொற்காலமாக ஒளிவீசும் என்பதிலே, மனசாட்சி மட்டுமே உள்ளவர்களுக்கு உதயமாகும் எண்ணப் புதையலாகும். தொழில் வளர்ச்சிகள், காமராஜர் காலத்தில்தான் பெருகின என்பதற்கு இன்றும் நடைபெற்று வரும் தொழிற் பேட்டைகள் பேசாதா அவற்றுக்கு வாய் மட்டும் இருந்தால்? அது போகட்டும், நெய் வேலி நிலக்கரித் திட்டம் , நீலகிரி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி ரணசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, மாவட்டத் தோறும் தோன்றியுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், சோடா உப்புத் தொழிற்சாலைகள், இவையெலாம் யார் ஆட்சியிலே தமிழகத்திலே தோன்றிப் பெருகின? தலைவர் காமராஜர் அவர்கள் ஆட்சியிலேதான் என்பதை இல்லையென்று எந்த வரலாற்று ஆசிரியர்களாவது மறுப்பரா? கிராமங்கள் மின்சார வசதி: இந்தியாவிலேயே, தமிழகம்தான் 13,300 கிராமங்களுக்கு மின் இணைப்பைக் கொடுத்து முதலிடம் பெற்றுள்ளது - காமராஜர் ஆட்சியிலேதான். பெரியாறு மின்சாரத் திட்டம், 9 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது. ஒரு லட்சம் கிலோவாட் மின்சாரத்தை நாம் அதன் மூலம் அப்போது பெற்றோம். 1995ஆம்ஆண்டான தற்போது பல மடங்குகளாக அதன் வளர்ச்சி பெருகியிருக்காதா? குந்தாமின்திட்டம் மூன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இதைப் பிரதமர் நேரு அவர்கள் திறந்து வைத்தார்கள். தமிழக மின்சார இணைப்பில், காமராஜ் அவர்கள் காலத்தில் மட்டும் 95 கோடி ரூபாய் மூலதனமாகக்கப்பட்டு, அதிலிருந்து 12 கோடி ரூபாய் வருமானம் பெறும் தகுதி உருவானது.