பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 341 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 42ஆவது மாநாட்டின் தலைவரான எஸ். சீனிவாச ஐயங்கார் மகள், திருமதி அம்புஜம்மாள் அவர்களை வரவேற்புக்குழுத் தலைவராக முதல்வர் காமராஜ் நியமித்தார். ஆவடி மாநாட்டு மேடையில் காமராஜ் அவர்கள் தனது தாயாருடனும் பாரதப் பிரதமர்நேரு அவர்களுடனும் தாமும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். மாநாட்டின் தலைமையை யு.என். தேபர் அவர்கள் ஏற்றார். அவர், சோஷலிச பாணிச்சமுதாயம் அமைய வேண்டிய அவசியம் பற்றியும், காங்கிரஸ் கட்சியின் கடந்த காலச் சூழல் பற்றியும் விரிவாக விளக்கிப் பேசினார். மார்ஷல் டிட்டோ மாநாடு வருகை! ஐரோப்பாக் கண்டத்திலே உள்ள யூகோஸ்லாவிய நாட்டின் அதிபரான மார்ஷல் டிட்டோ அவர்கள், சிறப்பு அழைப்பாளராக ஆவடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டுத் தலைவர் யு.என். தேபரும், பிரதமர் நேரு அவர்களும், முதலமைச்சர் காமராஜ், சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம் உள்ளிட்ட பலரும் அவரை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்கள். அதிபர் மார்ஷல் டிட்டோ அவர்கள் ஆவடி மாநாட்டில் பேசும் போது: 'எனது சார்பிலும் எனது யூகோ நாட்டின் சார்பிலும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறுகிறேன். இந்தியாவின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ள நானும் எனது துணைவியாரும் இந்தியா வந்துள்ளோம். எங்கள் நாட்டில் இரண்டாவது உலகப்போர் முடிந்ததற்குப் பிறகு, வளர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகளை நாங்களும் சமாளித்து வருகிறோம்.' "இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், போருக்கு முன்பு எங்களது நாடு பிரிவுபட்டிருந்தது. ஆனால், பிறகு அது ஒற்றுமை அடைந்தது. அதுதான் எங்களது வெற்றிக்குக்காரணம்.” “உங்களுடைய நாடும் அதே போல ஒன்றுபட்டிருப்பது அவசியமாகும். இந்தியாவைப் பற்றி ஒரளவு தெரிந்து கொண்டதில், நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” “உங்களது தலைவர்கள், உங்களைச் சோஷலிசஅமைப்பை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள் என்பது எனக் கும் பெருமையும் திருப்தியும் அளிக்கிறது. சக வாழ்வை