பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34.2 தேசியத் தலைவர் காமராஜர் ஊக்குவிக்கும் ஒரு நண்பனாக நான் இந்தியாவைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய நாடு நீடு வாழ்க!” - என்று, மாநாட்டில் கூடியிருந்த பல லட்சமக்கட் கூட்டத்தைக் கண்டு வியந்து, உணர்ச்சி பூர்வமாகக் கூறினார். பிரதமர் நேருவின் சோஷலிஸ் மழை! இறுதியாகப் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், மாநாட்டில் ஒர் அற்புதமான எழுச்சி உரையை ஆற்றினார். "நாட்டின் சமதர்ம பாணி சமுதாயத்தை அமைப்பதே நமது குறிக்கோள்! என்ற தீர்மானத்தை மாநாட்டின் பொதுக்குழுவில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் முன் மொழிந்தார்: தமிழக முதல்வர் தலைவர் காமராஜ், அந்தத்தீர்மானத்தை வழிமொழிந்து அழகான சொற் பொழிவை ஆர்வத்துடன் நிகழ்த்தினார். மாநாட்டில் எல்லோரும் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆசாத் முன்மொழிந்த தீர்மானத்தை, பிரதமர் நேருவும் தொடர்ந்து முன்மொழிந்து பேசினார். தலைவர் காமராஜ் அந்தத் தீர்மானத்தை வழி மொழிந்து பேசும்போது, 'கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். செல்வம் ஒரு சிலர் கையில் குவிந்திருக்கக் கூடாது. அது விரும்பத்தக்கதும் அல்ல. காந்தி பெருமான், அகிம்சை வழியில் நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தார். அவர் காட்டிய வழியில், நாம் சமதர்ம சமுதாயத்தை அமைப்போம். ' என்று சுருக்கமாகத் தலைவர் காமராஜர் அவர்கள் பெருத்த கையொலிகளுக்கு இடையே முழக்கமிட்டார். சத்தியமூர்த்தி நகரின் அதிசயங்கள்? பாரதப் பிரதமர் பண்டித நேரு அவர்கள் மாநாட்டின் இறுதியிலே பேசும் போது, சத்தியமூர்த்தி நகர் அலங்காரப் பணிகளின் அதிசயங்களைப் புகழ்ந்தார் : இந்த சித்தியமூர்த்தி நகரை, இத்துணைப் பேரழகுடன் படைத்த விசுவ கருமனாகிய முதல் மந்திரி காமராஜரை நான் வாயார வாழ்த்துகின்றேன். ' o 'வடநாட்டில்தான் இதுமாதிரி மாநாடு நடைபெற்றுள்ளது. வடநாட்டில் தான் நடத்தவும் முடியும் என்று கூறப்பட்டதை ஆவடி காங்கிரஸ் மாநாடு பின்னுக்குத் தள்ளிவிட்டது. ’’