பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 343 வடநாட்டில் நடைபெற்ற எல்லா மாநாடுகளையும் இந்த மாநாடு மிஞ்சிவிட்டது. இது தமிழ் நாட்டின் தலைசிறந்த மாபெரும் மாநாடாகத் திகழ்ந்துள்ளது. ஆவடி மாநாட்டில் கூடி ஒரு வார காலமாக விவாதங்களை நடத்தினோம். பல்வேறு அம்சங்களில், ஆவடி மாநாடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உண்மையில் இந்த மாநாடு உயிர்த் துடிப்பு மிக்கதாகவே அமைந்தது. இங்கு திரண்டுள்ள பல் லாயிரக் கணக்கான மக்களை எவரும் மறக்க முடியாது. சத்திய மூர்த்தி நகரை உருவாக்கியவர்களுக்கு மக்கள் நன்றி கூறவேண்டும். எனது நினைவிற்கு எட்டிய வரையில், இதுவே மிகக் கவர்ச்சிகரமாக அமைந்த மாநாடு. இதற்குக் காரணம், மக்கள் தலைவர் காமராஜ்தான். சென்னை -இந்தியாவின் தெற்குத் தலைநகரம்; ஒரு சிறந்த நகரம் என்ற சூழல், சென்னை முழுவதும் பரவியுள்ளது. - என்று, பிரதமர் நேரு அவர்கள், ஆவடி மாநாட்டையும், தலைவர் காமராஜ் அவர்களின் செயல் திறனையும் பலமாகப் பாராட்டிப் பேசினார். ஆவடிக் காங்கிரஸ் மாநாட்டின் போது, இராஜாஜி காங்கிரஸ் கட்சியிலேதான் இருந்தார். அவர், ஆவடி மாநாட்டிலும் கலந்து கொண்டார். மாநாட்டின்போது, இராஜாஜி ஆவடிக்கும் சென்னைக்கும் சி. சுப்பிரமணியத்துடன் போக- வர மட்டுமே இருந்தார். வேறு எந்த முக்கியத்துவமும் அவருக்கு வழங்கப்பட வில்லை. t#me>Itả ! UIrGugỏ ! இராஜாஜி! 'நீங்கள் ஏன் மாநாட்டின் விசேஷக் குழு விவாதத்தில் பங்கு பெற்று உங்களுடைய கருத்துக்களைக் கூறவில்லை" - என்று, சி. சுப்பிரமணியம் - இராஜாஜி அவர்களைக் கேட்டபோது, 'எனது வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்திராது. பழமைவாதி, பிற்போக்குவாதி என்று எனக்குப் பெயர் சூட்டியிருப்பார்கள்." என்று, இராஜாஜி அவர்கள் கூறினார். ஆவடி காங்கிரஸ் மாநாட்டில், தலைவர் காமராஜ் அவர்கள் ஆற்றிய சாதனைகளை, எல்லாப் பத்திரிகைகளும், காமராஜரின் சாதனைகள் என்று தலைப்பிட்டுப் பாராட்டின. ஆவடி மாநாடு காங்கிரஸ் கட்சிக்கும் - தலைவர் காமராஜ் அவர்களுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.