பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த காந்தி பக்தர்! 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காமராஜ் அவர்கள் தமிழக முதலமைச்சரானார். வரவிருக்கும் தேர்தல் நேரத்தில் இடைக்கால ஆட்சியாக அவருடைய அரசு இருந்தது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாகச் செங்கோலோச்சி, தமிழகமும் பாரத நாடும் - உலகமும் பாராட்டும் அளவிற்கு காமராஜர் புகழ் பெற்றார். எதிர்க்கட்சியினர்களும், அவரது அரசியல் எதிரிகளும் வியந்து போற்றுமளவிற்கு, தலைவர் காமராஜ் சாதனைகளுக்கு மேல் சாதனைகளைக் குவித்தார். இருப்பினும்,அவருக்குக் கடும் எதிர்ப்பும் இல்லாமலில்லை. மந்திரிப் பதவி மோகிகள்: தலைவர் காமராஜ் அவர்கள் அமைச்சரவையில், திருவாளர்கள் டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, கே. டி. கோசல்ராம், எஸ்.எஸ். மாரிசாமி, வி.கே. இராமசாமி முதலியார், விருதுநகர் ஜெயராம் ரெட்டியார், மற்றும் சிலரும் தத்தமக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று உட்கோபம் கொண்டு காமராஜ் மீது பனிப்போர் நடத்தி வந்தார்கள். காமராஜர் எதிர்ப்புக்குழு? அவர்கள் அனைவரும், தலைவர் காமராஜ் தங்களை ஏமாற்றி விட்டார் என்று வருத்தப்பட்டு, முணுமுணுத்தபடியே காமராஜ் எதிர்ப்புக் குழுவாகத் திரண்டார்கள்! இராஜாஜி மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர்களையே தனது மந்திரி சபையிலும் காமராஜர் அமைச்சராக்கிக் கொண்டார் - என்ற ஆத்திரமும் - கோபமும் அவர்களிடையே அலைமோதின! இத்தகைய காங்கிரஸ்காரர்களிடையே தலைவர் காமராஜ் அவர்களுக்கு உட்கட்சிப் பகை வளர்ந்தது. அது புறக்கட்சி விரோதத் தோடு கலந்தது. திராவிட முன்னேற்றக் கழகம்