பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி - 345 தமிழ்நாட்டில் செல்வாக்காக வளர்வதைக் கண்ட முதலமைச்சர் காமராஜர், ஒருமுறை அக்கட்சியைக் காரசாரமாகக் கண்டித்துப் பேசினார். “மரத்தடியிலும் - மைதானத்திலும் கூட்டம் போட்டா போதுமான்னே சட்ட சபைக்கு வா! அங்கே வந்து காங்கிரஸ் ஆட்சி மேலே உள்ள குற்றம் குறைகளைச் சொல்லுன்னே! சும்மா அலங்காரமாகப் பேசிட்டா குறைகள்லாம் போயிடுமாங்றே - என்று, முதலமைச்சர் காமராஜர் கோபமாகக் கொந்தளித்தார் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் பொதுச்செயலாளராக இருந்த அறிஞர்அண்ணா அவர்களும் 1957-ஆம் ஆண்டில் தலைவர் காமராஜ் அவர்கள் பேச்சைஏற்று, திருச்சி மாநகரில் மாநிலமாநாடு கூட்டி, அடுத்த தேர்தலில் ஈடுபடப் போவதாகத் தீர்மானம் போட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் 1957ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வந்தது. தலைவர்காமராஜர் அவர்கள் விருதுநகர் தொகுதியிலே இருந்து தமிழக சட்டப் பேரவைக்குப் போட்டியிட்டார். 1957-தேர்தல் காமராஜ் வெற்றி! காமராஜ் அவர்களை எதிர்த்து, மந்திரி பதவி கிடைக்காததால் கோபங்கொண்டவர்களுள் ஒருவரான விருதுநகர் ஜெயராம் ரெட்டியார், எதிர்க்கட்சிகளின்பொது வேட்பாளராகநின்றார். சாத்துர் தொகுதியிலே எஸ். இராமசாமி நாயுடு என்ற காங்கிரஸ்காரர் சட்டசபைக்குப் போட்டியிட்டார். இவர்1952ஆம்ஆண்டுத்தேர்தலில் சட்டப் பேரவைக்குப் போட்டியிட்டு வென்றவர். யாரை தேர்தலில் இவர் ஆதரிக்கின்றாரோ, அவரே அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவார் என்ற அளவில் அத்தொகுதியில் அதிக செல்வாக்குப் பெற்றவர் இந்தத் தேர்தலில், திராவிட முன்னேற்றக்கழகம் முதன் முதலாக நேரிடையாகவே தலைவர் காமராஜர் பலத்தால் வளர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை எதிர்த்துச் சட்டப் பேரவைக்குப் போட்டியிட்டது. இவ்வளவு எதிர்ப்புகளுக்கும் இடையே தலைவர் காமராஜ் அவர்களின் தேர்தல் வியூகத் திறமையால், காங்கிரஸ் கட்சி 205 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 15 இடங்களிலே வெற்றி பெற்றது! -