பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 தேசியத் தலைவர் காமராஜர் அண்ணா தலைமையில் தி.மு.க. வெற்றி! திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களிலே சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரம் தொகுதியிலே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப் பேரவையில், தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி - ஆளும் கட்சியாக அமைந்தது. காமராஜ் அவர்கள், தனது இரண்டாவது அமைச்சர் அவையிலும் முதலமைச்சரானார். அவரது அமைச்சர் அவையில், திருவாளர்கள் எம். பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், எம்.ஏ. மாணிக்கவேலர், பி. கக்கன், வி. இராமையா, திருமதி லூர்து அம்மாள் சைமன் ஆகியோர் இடம் பெற்றார்கள். ஆர். வெங்கட் ராமன் பிறகுதான் அமைச்சரானார். வினோபா பாவே பூமிதானப் பயணம்! காமராஜ் அவர்கள் ஆட்சியில் பூமிதான இயக்கத் தலைவரான ஆசாரிய வினோபா பாவே அவர்கள், தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார்: அவருடன் தலைவர் காமராஜ் அவர்களும், வினோபா நடைப் பயணமாகச் சென்ற ஊர்களுக்கெல்லாம் உடன் சென்று, பூமிதான இயக்கத்தின் குறிக்கோள்களை மக்களுக்கு விளக்கினார்கள். முதலமைச்சர் காமராஜ் அவர்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கைக் கண்டு வியந்து, 'நீங்கள் உண்மையான மக்கள் தலைவர், தலைசிறந்த காந்தி பக்தர்”, என்று, வினோபா பாவே அவர்கள் தலைவர் காமராஜைப் புகழ்ந்தது, வலிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெற்றது போன்று அரசியலில் அமைந்தது! குடிசைக்கும் - கோட்டைக்கும் இடையே மக்கள் பலத்தை உருவாக்கிய ஒரே தலைவர் காமராஜ் அவர்கள்தான் உட்கட்சிக் காங்கிரஸ்காரர்கள் யார் யார் அவரைக் காட்டுத்தனமாக, துரோகத்தனமாக, எட்டப்பத்தனமாக எதிர்த்தார்களோ, அவர்கள் எல்லாம் தலை தூக்க முடியாமல் திணறினார்கள் திகைத்தார்கள்! இறுதிவரை விலகியே நின்றார்கள்: இராஜாஜி, காங்கிரஸ் கட்சியோடு கருத்து முரண்பாடு கொண்டார்! பிரதமர் நேருவையும் முதல்வர் காமஜரையும் கடுமையாக எதிர்த்திட, சுதந்திரா கட்சி என்ற பெயரிலே ஒரு பணக்காரக் கட்சியை அமைத்தார்.