பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 34.7 அந்தக் கட்சியிலே, காமராஜரின் நட்பு எதிர்ப்பாளர்கள், பதவி தரவில்லையே என்ற கோபம் கொண்டவர்கள் எல்லாம் சேர்ந்து விட்டார்கள்! வேறு சில காமராஜ் துரோகிகள் எதிலும் சேராமல் ஒரமாகவே ஒதுங்கி நின்றார்கள் மற்றும் சிலர் மனம் வெதும்பி அரசியல் துறவியானார்கள்; அரசியலில் தேங்கிக் கிடந்தவர்கள், பதவிகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் தேம்பி வாழ்ந்தார்கள். எப்படி சமாளித்தார் எதிர்ப்புகளை! தனக்கு ஏற்பட்ட உட்கட்சி எதிர்ப்பையும், நன்றாகக் கோலோச்சுகின்றாரே என்ற அழுக்காற்றையும், பதவி தராமல் ஏமாற்றி விட்டாரே என்ற நயவஞ்சக நட்பையும், காமராஜ் எவ்வாறு சமாளித்தார் மக்களிடையே அவருக்கு இருந்த மகத்தான செல்வாக்கு மட்டும்தான் அதற்குக் காரணமா? தலைவர் காமராஜ் அவர்கள் திருமணமாகாத ஒரு பிரம்மசாரி எதிர்கால வாரிசுகள் யாரும் அவருக்கு இல்லை. அதனால், பணம், சொத்து சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமல் போயிற்று! பணம், குடும்பம், சொத்து ஆசைகளைத் துறந்தார்: இந்த நிலையிலும் எதிர்க் கட்சிக்காரர்கள் சிலர், காமராஜ் அவர்கள் ஆந்திராவில் உள்ள ஐதராபாத் நகரிலுள்ள ஒரு வங்கியில் கோடிக்கணக்காகப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். செத்தபின்பு பிண ஊர்வலமாகச் சென்றபோது வெறுங்கை களை வீதிகளிலே ஆட்டி அசைத்துக் கொண்டே சென்ற மாவீரன் அலெக்சாண்டரைப் போல, தலைவர் காமராஜ் அவர்களும் வெறுங்கைகளோடு தேரூர்ந்து சென்றதைச் சத்தியத் தமிழ்நாடு அறியும் பொய்யிலே பிறந்து - பொய்யிலே வளர்ந்து - பொய்யிலே வாழ்ந்து பொய் வாழ்வு வாழ்ந்தவர்கள் - இன்று ஊர் ஊராக அவமானப்படுகின்றார்களே அதைப் போன்ற வாழ்வு வாழ்ந்தறியாதவர் காமராஜர்! அதனால், அரசியலில் அவரை ஆண்மையோடு எதிர் அணுக முடியாத அரவாணி அரசியல்வாதிகள்தான் - அவர் சுவிஸ் வங்கியிலே, ஐதராபாத் நகரிலே திராட்சைத் தோட்ட நிலங்களாக வாங்கி வைத்துள்ளார் என்று கோயபல்சிசம் செய்தார்கள். காமராஜ் அவர்கள் தனது சம்பளத்திற்காக அரசு தரும் காசோலையைப் பணமாக மாற்றுவதற்காக மட்டுமே வங்கியில்