பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 தேசியத் தலைவர் காமராஜர் சேவிங்ஸ் பேங்க் கணக்கு வைத்திருந்தார்." - என்று, பொ. க. சாமிநாதன் என்ற அவரது நேர்முக உதவியாளர் 'மூன்று முதல்வர்களுடன் நான் என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்: அந்த வங்கி பாஸ் புத்தகம் கூட, தலைவர்காமராஜ் அவர்களது பாதுகாப்பிலே இருக்காதாம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் இராமண்ணாவிடம் இருந்தது என்று, அதையும் அவரே தனது 'மூன்று முதல்வர்களுடன்' என்ற நூலில் நூலில் சாமிநாதன் கூறுகின்றார்: தன்னைப் பெற்றெடுத்த தாயார் திருமதி சிவகாமி அம்மாளுக்குக்கூட பெற்ற மகன் காமராஜ் அளந்துதான் படி போட்டார். மாதம் 150 ரூபாய் விருதுநகரிலே உள்ள தனது தாயாருக்கு அனுப்பிய ஒரு நாட்டின் முதலமைச்சர் ஒருவரை உலகம் கண்டதுண்டா? அந்த ரூபாயைக் கூட தமிழகக் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம்தான் அனுப்பி வைக்குமாம். பெற்ற தாய்க்கே அளந்த படி 150 ரூபாய் என்றால், அந்தக் குடும்பம் உறவுக்கு, அதாவது பிரம்மசாரி காமராஜர் தங்கை, அவருடைய பிள்ளைகள் தங்களது இறுதிக் காலத்தில் ஒருவேளை சோறாவது ஒழுங்காக உண்டிட ஆசைப்படுவதிலே என்ன தவறு? இன்றைய அரசியல்வாதிகள், ஆயிரக்கணக்கான கோடி பணத்தை, ஆயிரம் உறவுக்கிளைகளிலே அதைப் பினாமியாகக் கட்டி, உந்தி உந்தி ஊஞ்சலாடிடும் போது, காமராஜ் தனது தங்கை உறவுக் கிளைப் பிரிவுக்குக்கூட ஒருவேளை சோற்றுக்கும் வழி வைக்காமல், அவர்களை வீட்டு முறைவாசல் வேலைக்காரிகளாக்கி விட்டுப் போய்விட்டரே என்பதை எண்ணும்போது, நம் நெஞ்சமெல்லாம் நெகிழ்கின்றது. அதே நேரத்தில் காமராஜ் அவர்கள் மீது கடும் கோபமும் கணக்கின்றது. நான் கூறுவது மிகையுமல்ல - காமராஜர் மேல் ஏற்பட்ட கடுங்கோபமும் அல்ல. சாதாரண ஒரு மனிதன் எண்ணும் மிக நேர்மையான கண்ணியமான அறவாழ்வுப் பண்பாளராகக் கூட அவர் வாழ மறந்துவிட்டாரே என்கின்றபோதுதான், 'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்திவ் வுலகு என்ற குறளாகிவிட்டார். பாவம்! நாம் எழுதுவதற்குச் சான்றாக இதோ குமுதம் ஏடு 29.6.95 ஆம் நாளிட்ட வார இதழில் 'காமராஜர் மருமகள் வீட்டு வேலை செய்கிறார்” என்ற கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதை அப்படியே இங்கே பிரசுரித்திருக்கின்றோம் படித்துப் பாருங்கள்.