பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 349 காமராஜர் மருமகள் வீட்டு வேலை செய்கிறார் தனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாத காமராஜருக்கு இருந்த ஒரே துணை அவரது தங்கை நாகம்மாள் குடும்பத்தினர் தான். காமராஜருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவைப் பெற்றுக் கொண்டவர்கள் இவரது குடும்பத்தினரே. எம்.ஜி.ஆர். ரூ.500ஐ 1000மாக உயர்த்தினார்! 500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வாங்கிக் கொண்டிருந்த நாகம்மாள் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சந்தித்து முறையிட உதவித் தொகை ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. 1993ஆம் ஆண்டில் காமராசரின்தங்கையான நாகம்மாளும் இறந்து போனார். நாகம்மாளுக்கு ஜவஹர், மோகன் என்று இரு ஆண்களும் மங்களம், கமலாதேவி என்று இரு பெண்களும் இருந்தனர். இவர்களது திருமணத்தை எல்லாம் காமராஜரே முன்னின்று நடத்தியிருக்கிறார். நாகம் மாளின் மூத்த மகளான மங்களம்மாளுக்கு இரண்டு பெண்கள், மூன்று பையன்கள், காமராஜர் குடும் பத்தில் மங்களம்மாள் பெண்ணான ஜோதி மட்டுமே டாக்டராகப் பணிபுரிகிறார். ஆண் மகன்கள் மூன்று பேரில் கனகவேல் காங்கிரஸில் தேர்தல் சீட்டு கேட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்தவர். தற்போது மூப்பனாருடன் இருக்கிறார். இன்னொருவர் சென்னை துறைமுகத்தில் பணிபுரிகிறார். மற்றொருவர் ஒயின் ஷாப் வைத்திருக்கிறார். விருதுநகரில் காமராஜர் குடியிருந்த வீடு அரசுடமையான பிறகு, ஒரு லட்சம் ரூபாய் பணம் அரசால் கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் விருதுநகரின் ஒரு பகுதியில் வீடு கட்டி காமராஜரின் தங்கை பிள்ளைகளான ஜவஹரும், மோகனும் குடியிருக்கிறார்கள். தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் மொத்தமாக ஆர்டர் எடுத்து வெளியூர்களுக்கு விநியோகிக்கிற தொழில் நடத்துகிறது இருவரது குடும்பமும். காமராஜரின் தங்கை மகனான ஜவஹருக்கு 6 வயதாகிறது. உடல் நலிவுடன் வீட்டிலேயே இருக்கிறார். 'மாமாவுக்குப் (காமராஜர்) பிறகு நாங்கள் யாரும் காங்கிரஸில் இல்லை. வியாபாரத்தில் ஏதோ ஒரளவு வருமானம் வருகிறது. அதை