பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 தேசியத் தலைவர் காமராஜர் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறோம் நானும், எனது தம்பி மோகன் குடும்பமும். அம்மா இறந்த பிறகு இவர் பெயருக்குக் கொடுத்து வந்த பென்ஷன் தொகையையும் நிறுத்தி விட்டார்கள். காமராஜர் பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்படாதபடி இருக்கிறோம். இந்த த் தலைமுறையில் சிலர் தான் அவரை இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள். அடுத்த தலைமுறை யெல்லாம் அவரை எங்கே நினைத்துப் பார்க்கப் போகிறது? பாரத ரத்னா விருது வாங்கப் போனதைத் தவிர எந்த விழாக்களுக்கும் போகிறதில்லை. ஏன்? திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் இருந்த வீட்டிலே அவருக்கு சிலை வைத்த போதும், விருதுநகரில் வைத்த போதும் அவரோட குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்குப் பெயருக்குக் கூட ஒரு அழைப்பு இல்லை...' என்று சொல்கிற காமராஜரின் மருமகனான ஜவஹரின் பேச்சில் சலிப்பு இழையோடுகிறது. காமராஜர் வசித்த வீட்டுக்கருகில் உள்ள வாடகை வீட்டில் காமராஜரின் மருமகளும் நாகம்மாளின் இரண்டாவது மகளான கமலாதேவியம்மாளும் வாழ்கிறார்கள். கமலாதேவியம்மாளுக்கு அறுபத்து மூன்று வயதாகி விட்டது. பாக்கு வியாபாரம் செய்த இவரது கணவர் விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர். ஒன்றரை வருடத்துக்கு முன் கணவர் இறந்துவிட, தனது இரு மக்களோடு, கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறார் கமலாதேவி அம்மாள். இவரது மக்கள் அதாவது காமராஜரின் பேரன்களான வைரவன், ராமர் இருவரும் 600 ரூபாய், 700 ரூபாய் சம்பளத்தில் தீப் பெட்டி ஆபிஸுக்கு வேலைக்குப் போர்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு மருமகள் உள்ளூரிலேயே குறைந்த சம்பளத்தில் தனியாரிடம் டைப்பிஸ்டாக இருக்கிறார். 'நானூறு ரூபாய் வாடகை போக, மீதிப் பணத்தை வைச்சு ஏழு பேரு சாப்பிட வேண்டியதிருக்கு. கஷ்டமாயிருக்கு. அம்மாவுக்கு வந்த பென்ஷனையும் நிறுத்திட்டாங்க. என் மருமகள் படிச்சிருக்கா... டைப் பிங் தெரியும்னு எத்தனை பேருக்கு வேலைக்கு எழுதிப் போட்டிருக்கேன்? முதல்வர் ஜெயலலிதாம் மாவுக்கும் அனுப்பிச்சிருக்கேன். (விண்ணப் பத்தைக் காட்டுகிறார்). ஒரு பதிலுமில்லை. போன வருஷம் கஷ்டம் தாங்காம இங்கே உள்ளகலெக்டர்காலில் விழுந்து அழுது கூட கேட்டுப் பார்த்தேன். எதுவும் கிடைக்கலை... இப்போ எனக்கு அறுபத்து மூணு வயசாகுது... இந்த வயதிலேயும் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்குப் போறேன்... கோ ஆபரேடிவ்