பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 351 ஸ்டோரைக் காலையில கூட்டுறேன். அதுக்கும் பணம் தர்றாங்க... பக்கத்திலேயே இருக்கிற மாமா (காமராஜர்) வீட்டைக் கூட்டினாலாவது மாதத்துக்கு ஒரு ஐம்பது ரூபாய் கிடைக்கும். அதுக்குக்கூட கேட்டுப் பார்த்துட்டேன். அங்கே போய் நானே வேலை செஞ்சா அவமானம்கிறாங்க. இதுலே என்னங்க அவமானம் இருக்கு... ' கண் கலங்கிப் போப் சொல்கிறார் கமலாதேவி.

  • ា... காங்கிரஸ்காரர்கள் யார்கிட்டேவாவது சொல்லலாமே?”

'பல பேர்கிட்டே சொல்லியாச்சு... இப்போ காங்கிரஸ் கமிட்டித் தலைவரான குமரி அனந்தன், பக்கத்திலே மாமா வீட்டுக்கு வந்தவர் இங்கேயும் வந்தார். அவர்கிட் டே சொன்னேன். மூப்பனார் வரைக்கும் சொல் லிப் பார்த்தும் ஒன்னும் நடக்கலை. மாமா (காமராஜர்) இருக்கிறவரைக்கும் அவருக்கும் எதுவும் சேர்த்துக்கலை, குடும் பத்துக்கும் சேர்த்துக்கலை... ஊரையெல்லாம் படிக்க வைச்சாரு... ஆனா அவரு குடும்பத்துலே எங்க அக்கா மகளைத் தவிர யாருமே சரியாப் படிக்காம அப்படியே கிடந்துட்டோம்... இப்போ பாருங்க... விதவைகளுக்குக் கொடுக்கிற பென்ஷனாவது கொடுங் கன்னு அரசுக்கு மனு ப் போடுற நிலைமையில இருக்கேன்...” காமராஜர் ஆட்சியைத் தமிழகத்தில் அமைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள்தான் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? காமராஜர் வாரிசுகளுக்கு உடனடி உதவிகள்! தலைவர் காமராஜ் சகோதரி குடும்பம் வறுமையிலே வாழ்வதைக் கண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள்.அனைவரும் அலட்சியமாக அக்கறையற்றவர்களாக - பாராமுகமாக இருந்தார்களே ஒழிய, யாரும் அவர் குடும்ப மானத்தைக் காப்பாற்றிட முன்வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியோ, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியோ - மத்திய டெல்லி ஆட்சியோ கொஞ்சம் மனிதநேயத்துடன் கருணை காட்டியிருந்தால், ஒரு தேசபக்தத் தியாகியான காமராஜர் அவர்களின் தன்னலமற்ற வாழ்க்கையை மதித்துப் பாராட்டி அந்தக் குடும்பத்தை வாழ வைத்திருக்க முடியும்.