பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352. தேசியத்தலைவர் காமராஜர் ஆனால், எந்தக் காங்கிரஸ்காரரும் அவரது குடும்ப மானத்தைக் காப்பாற்ற முயற்சிகூட எடுக்காமல் நடுத்தெருவிலே அனாதையாக விட்டுவிட்டார்கள். புரட்சித் தலைவி ஜெயலலிதா உதவிகள் இந்த நிலையில், தலைவர்காமராஜ் குடும்பம் என்ன செய்யும்? காங்கிரஸ் கட்சியைத்துக்கி எறிந்து தலைமுழுகி விட்டு தமிழக முதலமைச்சராக அப்போது இருந்த புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களது கட்சியிலே சேர்ந்து விட்டார்கள். மனிதாபிமானியாக, ஒரு முன்னாள் முதலமைச்சர் மானத்தைக் காக்கும் மானாபிமானியாக, தலைவர் காமராஜ் அவர்களது தேசபக்தி ஆட்சியை மதிக்கும் தேசாபிமானியாக மாறித் தலைவர் காமராஜர் குடும்ப வாரிசுகளுக்கு அவர் தக்க உதவிகளை வழங்கினார். முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், தலைவர்காமராஜர் குடும்பத்திற்கு ஆற்றிய குடும்பாபிமான உதவி விவரத்தை 9.8.95 அன்று வெளியிட்ட தினந்தந்தி’ நாளேடும், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகளும் இதோ: படியுங்கள், தினத்தந்தி 9.8.95 நாளேடு கூறுவதை: ஏழுலட்சம் ரூபாயில் காமராஜர் குடும்ப நிதி 'பெருந்தலைவர் காமராஜரின் தங்கையின் பேரனான ஆர். கனகவேலுவுக்கும், காமராஜரின் மற்ற வாரிசுகளுக்கும், அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஏழு இலட்சம் ரூபாயில் காமராஜர் குடும்ப நலநிதி ஒன்றை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்படுத்தினார். ’’ அந்தப் பணத்தை வைப்பு நிதியில் இட்டு, அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயைக் கொண்டு காமராஜரின் வாரிசுகளுக்கு மாதாமாதம் நிதி உதவி வழங்குகின்ற திட்டம் ஒன்றையும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். மூவருக்கு அரசு இலவச வீடுகள் காமராஜர் உடன்பிறந்த ஒரே தங்கையான நாகம்மையார் பெண்களான மங்களம், கமலாதேவி, மற்றும் கனகவேலு, ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் இலவசமாக வீடுகளை வழங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.'