பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 353 '8.8.95ஆம் நாளன்று புரட்சித் தலைவி முதல்வர் ஜெயலலிதா அவர்கள், பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் வாரிசுகளைத் தலைமைச்செயலகத்திற்கு, வரவழைத்து அந்த உதவிகளை நேரில் வழங்கினார். அ.இ.அ.தி.மு.க. சார்பில், 7 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள காமராஜர் குடும்ப நலநிதி, நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கின்ற வருவாயைக் கொண்டு 5 பேருக்குக் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது. மாதம் 8000 ரூபாயில் 5 பேருக்கு பங்கு 'கமலாதேவிக்கு மாதம் ஒன்றுக்கு 2,333/- ரூபாயும், ஆர். மங்களத்துக்கு மாதம் 1,166/-ரூபாயும், கே. ஜவஹர்லாலுக்கு மாதம் 1,166/-ரூபாயும், கே. மோகனுக்கு மாதம் 1,166/- ரூபாயும், காமராஜரின் சிதைக்கு தீ மூட்டிய தங்கையின் பேரன் கனகவேலுக்கு மாதம் 2,333/- ரூபாயும், மேலும் 5 ஆண்டுகளுக்கு அவற்றைப் பெறுவதற்கானகாசோலைகளையும் முதல் அமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா, காமராஜர் குடும்பத்தினர்களிடம் நேரில் வழங்கினார். "மொத்தம் 5 ஆண்டுகளுக்குரிய பின்தேதியிட்ட காசோலைகள் அவர்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாண்புமிகு புரட்சித் தலைவி முதலமைச்சர் அறிவித்தபடி, நாகம்மையின்மகள் மங்களத்திற்கு மதுரையில் வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒதுக்கீட்டு ஆணையை அவ் வம்மையாரிடம் வழங்கினார். "நாகம்மையின் இன்னொரு மகளான கமலா தேவிக்கு விருது நகரிலுள்ள தமிழ் நாட்டு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை இலவசமாக வழங்கி, அதற்குரிய ஒதுக்கீட்டு ஆணையையும் அவரிடம் நேரில் தமிழக முதல்வர் வழங்கினார். 'நாகம்மையின் பேரன் (காமராஜ் பேரன்) கனகவேலுவுக்கு சென்னையில் ஒரு உயர்தர வருவாய் பிரிவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை இலவசமாக வழங்கி, அதற்குரிய ஒதுக்கீட்டு ஆணையை புரட்சித் தலைவி அவரிடம் நேரில் வழங்கினார். நாகம்மையின் பேரனும், கே. மோகனின் மகனுமான சிவக்குமார், தனக்கு அரசுப் பணியிடம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று, அவருக்கு பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்து அதற்குரிய நியமன ஆணையையும் சிவகுமாரிடம் வழங்கித் தனது