பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354. தேசியத் தலைவர் காமராஜர் வாழ்த்துக்களையும் புரட்சித் தலைவி முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார். "அவர்களது குறைகளைக் கேட்டு அறிந்ததோடு மிகக் குறுகிய காலத்தில் அவற்றைக் களைவதற்கு ஏற்பாடுகளைச் செய்து, அதற்குரிய அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்குப் பெருந்தலைவர் காமராஜரின் வாரிசுகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். தினத்தந்தி 9.8.95. ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் காமராஜர் அவர்களுக்கு அரசியல் பொதுக்கூட்டத்தில் பதில் கூறும்போது, 'இந்தக் கால் சட்டைகள் போட்ட எனது தம்பிமார்கள் (கழகம்)தான் உங்களுடைய கடைசி காலச் சடங்குகளைச் செய்து கொடுப்பார்கள். ' என்று குறிப்பிட்டதை இதே நூலில் வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். அதே போல, அறிஞர் அண்ணா அவர்களது வாரிசாக அமர்ந்து ஆட்சி புரியும் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள்தான், பெருந்தலைவர் காமராஜர் அவர்களது வாரிசுகளுக்குள்ள வறுமை நிலையைப் போக்கிட எல்லாவித உதவிகளையும் செய்து கொடுத்துள்ளாரென்றால், ஒர் அறிஞர் பெருமானின் தீர்க்கதரிசனமான வாக்கு எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா? தமிழ்நாட்டை ஒன்பதரை ஆண்டுக்காலம் ஊழலற்ற ஆட்சி செய்த ஒரு சத்திய சீலன், ஒழுக்க சீலன், காந்தியவாதி, தன்னலமற்ற ஓர் அரசியல் துறவியின் குடும்ப நிலை இது. இத்தகைய ஒரு மா மனிதரை எந்த நாட்டு வரலாற்றிலாவது கண்டதுண்டா? கிரேக்க நாட்டு அறிவியல் மேதை, சாக்ரடீஸ் பெருமான் பக்கத்து வீட்டிலே உள்ள ஒருவரிடம் ஒரு கோழியைக் கடனாகப் பெற்றானாம் தனது உணவுக்காக கிரேக்க நீதிமன்றம் வஞ்சகமாக அவரிடம் நச்சுக் கோப்பையைக் கொடுத்துப் பருக வைத்தபோது, அதையும் பருகிவிட்டு, சாக்ரட்டீஸ் தனது நண்பன் கிரீட்டோவை அழைத்து, சாகும் தறுவாயில், 'தான் கடனாகப் பெற்ற அந்தக் கோழியைத் திருப்பிக் கொடுத்து விடு' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டானாம்! -