பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 355 தலைவர் காமராஜ், சாக்ரடீசைப் போலக் கூட ஒரு கோழியையும் கடனாகப் பெற்று வாழ்ந்தறியாதவராக மாண்டார் என்றால், அவரது அரசியல் தியாக மனப்பாங்கை எப்படிப் போற்றி மகிழ்வது என்பதை மண்ணுலகம் எண்ணி வியக்காதா? அதே சாக்ரட்டிஸ் மாமேதையின் மாணவரான அரசியல் மாமேதை பிளாட்டோ என்பவர். தனது குடியரசு' என்ற நூலில், மக்களை மூன்று வகையாகப் பிரித்து அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று ஒர் ஆட்சிக்கு இலக்கணமும் வகுத்தார். தங்க மனிதர், வெள்ளி மனிதர், இரும்பு மனிதர் என்று மக்கள் இனத்தை மூன்று வகையாகப் பிரித்து ஒரு நாட்டு மக்கள் வாழ வேண்டும்’ என்றார். தங்க மனிதர் என்பவர்கள், ஆட்சியை நடத்துபவராக இருக்க வேண்டும். அவர் சமுதாய மக்களிடம் தங்கம் போல் மதிப்பும் - மரியாதையும் பெற்றவராகத் திகழ வேண்டும். ஆட்சியை நடத்த வருகின்ற அந்த தங்க மனிதர் யாரென்றால், குடும்பப் பாரம் அற்றவராக, உறவு முறை என்ற பந்தபாசம் இல்லாதவராக, பொருட்கள் மீது பற்றற்ற அரசியல் துறவியாக இருக்க வேண்டும்' என்பதாகும். ஏன் அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தனது நூலில் விளக்கம் எழுதும்போது, அப்போதுதான் பொதுமக்கள் பணத்தை ஊழலுக்கு உட்படுத்தாமல், தனக்கென்று எதுவும் சொத்து திரட்டிக் கொள்ளாமல் பற்றற்ற வாழ்வு வாழ முடியும். அதனால், நாட்டிற்கு அவர்கள் ஒழுக்கம், பண்பாடு, நடைமுறை வாழ்வுப் போக்கு அனைத்திற்கும் ஒர் எடுத்துக்காட்டாக ஒம்பப்படுவார்கள் என்றார்: தங்க மனிதர்கள் ஆட்சிக்கு வரும் போது, அவர்கள் குடும்பமற்றவர்களாக, பந்த பாசமில்லாதவர்களாகத் திகழ்ந்தால்தான், சுயநலம் என்ற வாழ்வு வலையிலே அவர்கள் சிக்கித் திண்டாடமாட்டார்கள்! அதனால், ஆட்சியின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் கூற்றுவர்களாக இருக்கும் நிலை ஏற்படாது' என்றார். 'அந்தத் தங்க மனிதர்களுக்கு ஒருகால் சிற்றின்ப நுகர்ச்சி எழுமானால், அவர்கள் விரும்பும் பொதுமகளிரோடு இன்பம் காணலாம். அந்த நிலை எழும் போது, வாரிசு கரு வளர்ந்து பரம்பரைச் சின்னம் தோன்றினால், அந்தச் சிசு அரசு கண்காணிப்பிலே பராமரிக்கப்படும். குழந்தைகள் விடுதியிலே சேர்த்து அதன் எதிர்காலத்தை ஏற்றம் பெறச்செய்து விடவேண்டும்’ எனறாா.