பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 தேசியத் தலைவர் காமராஜர் தலைவர் காமராஜ் வாழ்க்கை, பிளேட்டோவின் குடியரசு இலக்கணத்திற்கும் ஒர் இலக்கணமாக அமைந்துவிட்டதை எண்ணும்போது, வரலாற்றில் அவர் தங்க மனிதர்களையும் மீறி, வைரமனிதராக வாழ்ந்து காட்டிமறைந்து விட்டாரே, அதுவன்றோ அற்புத அரசியல் வாழ்க்கை? தலைவர்காமராஜ் பிரமசாரியாகவே வாழ்ந்த ஒர் அரசியல் துறவியாகவே காலம் உள்ளவரை போற்றப்படும் ஒரு மாமனிதர் அல்லவா! யாதும் ஊரே யாவரும் கேளிர்! தலைவர் காமராஜ், தமிழ்நாட்டு ஏழை மக்களைத்தான், தனது சுற்றமாக, பந்த பாசமாக, உற்றார் உறவினர்களாகக் கருதினார்! குறிப்பாக, அடிமட்ட ஏழை மக்களையே தமது குடும்பமாக நினைத்து, அவர்கள் நல் வாழ்வு வாழ, கல்வி அறிவு பெற, உழைத்து உருக் குலைந்து மண்ணுக்கும் உரமானார்: அதனால், தன்னை ஈன்றதாய் மீது கூட ஓரளவுக்குத்தான் பாசம் வைத்து, அதுவும் 150 ரூபாய் என்று அளந்து படிபோட்டார் அந்த தாய்ப் பாசமும் நேசமும், நீதிக்கும் நேர்மைக்கும் உட்பட்டே அவரிடம் குடிகொண்டிருந்தது; எடுத்துக்காட்டாக, தலைவர் காமராஜ் ஆட்சியில் அவர்களது சகோதரி நாகம்மையார் பேரன் கதிர்வேலு என்பவர் ஒரு வழக்கில் சிக்கித் தண்டனை பெற்றார். அப்போது அவரது ஆட்சியிலே காவல்துறை அமைச்சராக இருந்தவர் திரு. கக்கன் அவர்கள். டயஸ் என்பவர் அப்போது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்டாகப் பணியாற்றினார். அவர்கள் இருவரும் சேர்ந்து முதலமைச்சராக இருந்த தலைவர் காமராஜர் அவர்களை அணுகி, கதிர்வேலு தண்டனையைக் குறைத்திட தங்களால் இயன்ற வரை அவருக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்கள்! முதலமைச்சரான காமராஜர், தனது உடன் பிறந்த சகோதரியின் பேரன் கதிர்வேலு தவறு செய்தாலும், அவன் பெற்ற தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். அவருக்கு உதவிபுரிய மறுத்து விட்டார். இவர்தான் காமராஜர் இத்தகைய ஒரு முதலமைச்சர் - நீதிமான்-நேர்மையாளர் ஒருவர்; இந்த ஈனத்தனமான அரசியலில் எல்லாப் பண்புகளிலும் உயர்ந்து இருந்தார் என்பதை நம்புகிறீர்களா? இருந்தால் கண்டு பிடியுங்கள் - காட்டுங்கள் அவர் காலணிகளைத் தலையில் சுமக்கலாம் - இராமாயணப் பரதனைப் போல!