பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 357 ஓர் அரசு அதிகாரி, தாம் பணிபுரியும் இடம் விட்டு வேறு இடம் மாறுகின்ற நிலை வந்தால், அவர்கள் புதிய இடம் போகின்ற குடும்ப வழிப் பயணச் செலவுகள், மற்ற பிற செலவுப் படிகள் அனைத்தையும் முன் பணமாக வாங்கிப் பழக்கப்பட்டவர்களாக இருப்பதை இன்றும் நாம் காண்கின்றோம். அவர்கள் தமது செலவுப் பணத்தை அதிகமாகக் கூட்டிப் பெறுவார்களே தவிர, செலவுப் பணத்தைக் குறைத்துப் பெற மாட்டார்கள் - முடியாத காலநிலை இது. நாட்டின் நிலை இவ்வாறிருக்க, பயணப்படியே வேண்டாம் என்று கூறிடும் சாதாரண அல்லது உயர்தர அதிகாரி ஒருவரையாவது அடையாளம் காண முடியுமா நாட்டில் ? அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானபோது, தனது ஆயிரம் ரூபாய் சம்பளத்தை ஐநூறு ரூபாயாகக் குறைத்துக் கொண்டாரே தவிர, தனது பயணப்படி, தினப்படிகளை எல்லாம் வேண்டாம் என்று அவராலும் கூற முடியவில்லை! அவரது அன்றைய நிலை அது தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்கள் - அமைச்சர்கள் - அதிகாரிகள் உட்பட அனைவரும், தங்களது முழுச்சம்பளத்தையும் - பயணப் படியையும் தினப்படியையும் பெற்றார்களே அன்றி வேண்டாம் என்று எவரும் சொல்லவில்லை. ஆனால், விதிவிலக்காக, முதலமைச்சர் காமராஜ் ஒருவர்தான், தமிழகத்தில் மாதத்திற்குப் பதினைந்து நாட்கள் சுற்றுப் பயணம் செய்தும் கூட, தனது சுற்றுப் பயனப்படியையும் - தினப் படியையும் வாங்க மறுத்துவிட்டார். இப்படியும் ஒரு மனிதரை - அதுவும் அரசியல் துறையிலே - இன்றும் என்றும் காண முடியுமா? இந்திய விடுதலைப் பிதாமகனாரான காந்தி பெருமான் துப் பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், உலகப் பேரறிஞர்கள் எல்லாம் தங்களது கண்ணிரை உகுக்கும்போது, அவரவர் கருத்துக்களை வரலாறு சுமக்கும் வகையில் கூறினார்கள் நகைச்சுவைநாயகம் பேரறிஞர்பெர்னாட்ஷா தனது கருத்தை நவிலும்போது, "வரும் நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மனிதன் இருந்தார் - வாழ்ந்தார்’ என்று கூறினால், அக்கால மக்கள் நம்புவார்களோ-மாட்டார்களோ, யார் கண்டார்!’ என்று குறிப்பிட்டார்: அதற்கொப்ப, ஏழைக்குடும்பத்திலே தோன்றி, முதலமைச்சரான ஒருவர், பயணப்படி, தினப்படி கூட வாங்காத ஒர் ஏழை முதலமைச்சர், இந்த இந்திய நாட்டிலே இருந்தார்என்றால், எதிர்கால மக்கள் நம்புவார்களோ மாட்டார்களோ யார் கண்டார்? அதற்கும் ஒரு கோயபல்சிசம் பேசுவார்களோ என்னவோ! எவர் கண்டார்