பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 தேசியத் தலைவர் காமராஜர் எதிர்காலம் என்ன? இப்போதே, நம்முடைய தலைமுறை யிலேயே வாழ்கின்ற, எதிர்க்கட்சிக்காரர்களே நம்ப மாட்டார்களே! அவ்வளவு காழ்ப்பேறி மரத்துப்போன அரசியல் ஊழல்வாதிகள் உலாவரும் காலமாகி விட்டதே நிகழ்காலம்! தனது சம்பளத்தில் காரோட்டி சம்பளம்.! இதைவிட இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா? எந்த ஒர் அலுவலக உயர் அதிகாரியும், தனக்குக் கீழ், தனது இல்லத்திற்கு வேண்டிய வேலைகளைச் செய்திட ஆட்களைப் பியூனாக நியமிப்பார்கள். ஆனால், அந்த வேலையாட்களை அரசு ஊழியர்களாக்கி, அல்லது அரசு ஊழியர்களை தங்களது பணியாளர்களாக்கி, அவர்களுக்குரிய சம்பளத்தை, பயணப்படியை, தினப்படியை ஆட்சியிடமிருந்து பெற்றிட வசதி செய்துகொள்வார்கள் இந்த நிலை அமைச்சர்களிடம் மட்டுமல்ல, ஆட்சியின் எல்லாத்துறைகளிலும் உண்டு. ஆனால், அது சிதம்பர ரகசியம்! முதலமைச்சராகப் பணியாற்றிய தலைவர் காமராஜ் அவர்கள், காவல்துறை உயர்அதிகாரியாக அப்போது பணியாற்றிய எஃப்.வி. அருள் ஐ.பி.எஸ் அவர்களிடம், தனது சொந்தக்காரை ஒட்டிட ஓர் ஒட்டுநர் தேவையென்று கேட்டார். ஆயுதப் போலீஸ் ஒட்டுநர் துறையிலே இருந்த 1893 என்ற காவலர் எண் பெற்ற சுந்தரமூர்த்தி என்பவரை ஒட்டுநராகப் பணியாற்றிட முதலமைச்சர் காமராஜரிடம் அந்த அதிகாரி அருள் அனுப்பி வைத்தார். முதலமைச்சர் வெளியூர்களுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்யும் கார், தலைவர் காமராஜருக்குரிய சொந்தமான கார். அதற்கு அவர் அரசாங்கத்திடமிருந்து அலவன்சாக மாதந்தோறும் பணம் பெற்று வந்தார். தனது காருக்கு ஒட்டுநராக வந்தவர், தலைவர் காமராஜரிடம் காரோட்ட வருவதற்கு முன்பு, அரசிடமிருந்து மாதந்தோறும் 98 ரூபாய்சம்பளமாகப் பெற்றுவந்தார். முதல்வர்காமராஜ் அவர்களிடம் கார் டிரைவராக அவர் வந்த பிறகு சுந்தரமூர்த்தியினுடைய மாதச் சம்பளத்தை அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டாம் என்று கூறித் தடுத்து விட்டார். - அந்த ஒட்டுநர், ஆயுதப் போலீஸ் துறையில் ஏற்கனவே பெற்றுவந்த சம்பளம் 98 ரூபாயோடு, 12 ரூபாயை அதிகமாகக் கூட்டி, 110 ரூபாயாக, தனது சொந்தச் சம்பளத்திலிருந்து