பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் கட்சியை ஆங்கிலேயர் ஆதிக்கமென்ற கடலிலே கொற்கை முத்தாகத் தோன்றியவர் திரு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் அவர்கள்! மனச்சான்றென்ற மேகத்தை அவர் ஆடையாக அணிந்த மானத்தவர் அதிகார மமதைகள் என்ற கார்மேகக் குவியல்களைத் தனது மனித நேயக் கருணை மின்னல்களால் தாக்கியவர் ஆண்மை என்ற செயல் வீர இடிகளால்; அடிக்கடி ஆங்கிலேயரோடு பிரச்னைக்கேற்ப மாறிமாறி மோதியவர்: பூ மழை என்ற உதவிகளைத் துரல்களாகப் பெய்து இந்திய மக்களுக்குச் சிறு சிறு இன்பங்களை விளைவித்தவர் அவர் 'எந்த ஆர்ப்பாட்ட அல்லல்களுக்கும் ஒர் எல்லையுண்டு; கபாடமுண்டு; தாழ் உண்டு; திறவுகோலும் உண்டு, என்பதை இந்தியாவில் ஒர் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்ததின் மூலமாக உலகுக்கு உணர்த்தியவர் ஹியூம்! ஆதிக்க ஆர்ப்பாட்ட அலைகளைத் தடுக்கும் கரையாக, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைக் கட்டி, வறிய மக்களைத் தடுத்தாட் கொண்டவர் ஹியூம்; அவர் இந்திய மக்கள்.அச்சத்தை அகற்றியவர்: நாட்டுக்குத் தொண்டாற்றும் தியாக வித்தைக்கு நாயகனாக நடமாடியவர்: எத்தனை ராணுவங்கள் வந்தாலும் ஏறென எதிர்த்து நின்று போராடும் எழுச்சிமிக்க வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆசானாக அமர்ந்து பயிற்சி கொடுத்தவர்; ஹியூம் யார்? சாதனைகள் என்ன? அத்தகைய அரும் பெரும் ஆங்கிலேய எதிர்ப்பாளரான திரு ஹியூம் அவர்கள், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியை முதன் முதலாகப் பம்பாய் நகரிலே தோற்றுவித்ததாக, அதன் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் உண்மையல்ல அது!