பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 359 ஒட்டுநருக்குரிய சம்பளமாகக் கொடுத்து வந்தார் காமராஜர். இவ்வாறு, சம்பளமாகக் கொடுத்தது ஒன்றிரண்டு மாதங்கள் அல்ல. முதலமைச்சர் பதவியை விட்டு அவர் விலகி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின்பும் கூட, ஒன்றரை ஆண்டுக்கு மேலாக அவரையே ஒட்டுநராகத் தனக்கு வைத்திருந்து அதே 110 ரூபாயையே கொஞ்சமும் குறைக்காமல் - கூட்டாமல் சம்பளமாகக் கொடுத்து வந்தார் - தலைவர் காமராஜ். தலைவர்.அவர்கள் பணத்தாசைப் பெற்றவராக இருந்திருந்தால், அவரது ஒட்டுநரின்சம்பளத்தை அரசாங்கத்திடமே இருந்து பெற்றிட வழி செய்திருக்கலாம்! மக்கள் வரிப்பனத்தைத் தனது சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அல்லவா அவர்? தனது காருக்கு வாங்கும் அரசு அலவன்ஸ் மட்டுமே போதும் என்ற மனசாட்சியுடையவராக அவர் வாழ்ந்ததால்தான், ஒட்டுநருக்கும் தனது சொந்தப்பணத்திலிருந்தே சம்பளம் கொடுத்து வந்தார். இன்றைக்கு அரசியல்வாதிகள் எனப்படுவோர்களுக்கு மனச்சாட்சி என்ற ஒன்று இருக்கிறதா என்பதற்கு இது ஒர் உதாரணமல்லவா? (.. ဂ္ယီဒီး &

ఖైః £ 获 مید