பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதமர் நேருவைப் பிற்போக்குவாதி என்றார்கள் பொதுவுடைமைவாதிகள். மத்திய அரசுக்கு எதிராக, தவறானப் பிரசாரத்தையும் செய்தார்கள். பொதுவுடைமைவாதிகளின் தவறான அந்தப் பிரசாரத்தை மக்களுக்கு எடுத்து உணர்த்த விரும்பிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், துடிப்புமிக்க ஒருவர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வரவேண்டும் என்று கருதினார்கள். பிரதமர் நேரு அவர்களிடம் அதற்காக வாதிட்டார்கள். முதலமைச்சர்காமராஜ் அவர்கள், "இந்திராகாந்தி அவர்களை அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சிக் குத் தலைவராக வரச்செய்து, காங்கிரஸ் இளைஞர்அணிகளின் பிரசாரத்தை முடுக்கி விட்டால்தான், கம்யூனிஸ்டுகளின் அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த முடியும்’ என்றார். பிரதமர் நேரு அவர்கள், இந்த முடிவுக்கு ஒப்பவில்லை. தலைவர் காமராஜ் அதற்குரிய காரண விளக்கங்களோடு பிரதமருக்கு எடுத்துக் கூறிய பின்பு, நேரு அவர்கள் அதற்குச் சம்மதம் அளித்தார். திருமதி இந்திரா காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் என ஆகவும், தலைவர் காமராஜ்தான் காரணமாக இருந்தார்; இறுதியில் அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சித் தலைவரான இந்திரா காந்தியின் எதிர்போராட்ட விளைவுகளால், கேரளக் கம்யூனிஸ்டு ஆட்சி கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகளின் தவறான பிரசாரங்களும் ஒய்ந்தன. அக்கட்சியின் பலமும் கேரளாவில் ஒடுங்கியது. சுதந்திராக் கட்சி தோன்றியது ஏன்? இதே கால கட்டத்தில், 1954ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்களுக்கும் - இராஜாஜி அவர்களுக்கும் ஏற்பட்ட பதவிப்