பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 36% பறிப்பு மனக் கசப்புகளால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. 1960ஆம் ஆண்டில், இராஜாஜியின் ஆறாண்டு கால கோபக் கொந்தளிப்புகளின் உச்சக் கட்டமாக, அவர் சுதந்திரா கட்சி என்ற பெயரில் அகில இந்தியக் கட்சி ஒன்றைக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாக்கினார். முதலாளிகளின் கைப்பாவை, சுதந்திராக்கட்சி, பணக்காரர்களின் எடுபிடிக் கட்சி. அதனால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இருக்காது’ என்று பிரதமர் நேரு அவர்கள் அதைக் கடுமையாகச் சாடினார்; கருத்தும் அறிவித்தார். சீனாவின் ஆக்ரமிப்பு! இந்தியாவின் வட எல்லையில் அப்போது, சீன நாட்டின் மக்மோகன் எல்லைக்கோடு விவகாரமாக இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் நாளுக்கு நாள் பகை வளர்ந்து வந்தது. அனைத்துலக நாடுகளில், இந்தியாவிற்குப் பெருகிவரும் செல்வாக்கு, புகழ், ஜனநாயக ஆட்சி முறைகளாகிய இவற்றை சீன நாடு விரும்பவில்லை. காரணம், அது ஒருவகையான கம்யூனிச நாடு! அதனால், இரு நாடுகளுக்கிடையே, பகை வளர்ந்து - வளர்ந்து, நாளடைவில் 1962ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் போர் மூண்டது. 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழகச் சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களாக வெற்றிபெற்ற பதினைந்து தி.மு.க. எம்.எல்.ஏக்களும் தமிழ் நாட்டில் மிகத் திறமையாக மக்கள் பணியாற்றி வந்தார்கள். அதே நேரத்தில் அவர்கள், தங்களது கட்சிப் பணிகளையும் செம்மையாகச் செய்து கட்சியைத் திறம்பட வளர்த்து வந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த அசுர வேக வளர்ச்சி, தலைவர் காமராஜ் அவர்களுக்கு ஒரு தலைவலியாக உருவெடுத்து வந்தது மட்டுமல்ல; அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த அரசியல் அதிர்ச்சி, 1962ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மிகப் பலமாக உருவெடுத்தது. அதனால் தமிழகக் காங்கிரஸ் கட்சியிலே தேக்கமும் - மந்தமும் உருவாயிற்று. அந்தச் சமயத்தில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில், தி.மு. கழகம் சென்னை மாநகராட்சி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. மக்களிடையே அக்கட்சியின் செல்வாக்கு அபரிமிதமாக வளர்ந்து வந்தது.