பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 தேசியத் தலைவர் காமராஜர் உடைந்தது தி.மு.க. திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன் முதலாக ஒர் உட்கட்சிப் பிளவு ஏற்பட்டது. சொல்லின் செல்வர் என்று கழகத்தவரால் அழைக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் மகனாரான ஈ.வெ.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன், மற்றும் அவருடைய அணியினர் தி.மு. கழகத்தை விட்டு விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற ஒரு புதிய கட்சியைத் துவக்கினார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தவாறு, தமிழகத்தில் வேகமாக வளர்ந்திடப் போதிய வசதிகள் வாய்ப்புகள் இல்லை. அதனால், பிரிந்து வந்துவிட்ட அவர்கள், திமுகழகத்தின் வளர்ச்சியை - அணுவளவும் தடுக்கப் பலமில்லாதவர்களாக இருந்தார்கள். இந்த பிளப்பிலே வெளியேறிய தி.மு.க.வினரைக் காங்கிரஸ் கட்சியிலே சேர்த்துக் கொண்டால், தி.மு.க. பலம் சரியும் குறையும் என்று தலைவர்காமராஜ் கருதினார். அதனால், அவர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சியிலே சேர்த்துக் கொண்டார். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களிடையே, தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களாகத் தோன்றியவர்தான் பழநியாண்டி, எம்.பி. சுப்பிரமணியம், நெடுமாறன் போன்றவர்கள் என்பதை தமிழகக் காங்கிரஸ் கட்சி வரலாறு உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. தலைவர் காமராஜ் அவர்கள் என்ன நினைத்துப் பிளப்பிலே வெளியேறியவர்களைத் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டாரோ; அந்த எண்ணம் - சோகை பிடித்த காசநோய்க்காரர்கள் நிலையிலே தள்ளாடியது. வந்தவர்களால் காங்கிரஸ் பலவீனம் அதனால், காங்கிரஸ் கட்சி வளரவில்லை மாறாகக் காங்கிரசிலே போட்டி, பொறாமை, கட்சி பேதக்காழ்ப்பு, பாரம்பர்யப் பகட்டுகள் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமானது. பணம், பதவி, பட்டம் , தலைமைத் தகுதிகள், செல்வாக்கு களைச் சேகரிக்க, புதிதாகப் புகுந்தவர்கள் முயன்றார்களே தவிர, அவர்கள், தி.மு.க. வளர்ச்சிகளை எள்ளளவும் குறைக்கப் போதிய பலமில்லாதவர்களாகி, காங்கிரஸ் மேடைகள் தோறும் 'நா' வரங்க நடிகர்களானார்கள். சுருக்கமாகக் கூறுவதானால், புதியவர்கள் வருகையால் காங்கிரஸ் கட்சியின் வேகம் குறைந்தது; குரோத - விரோத அணிகள் பெருகின!