பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 363 இவ பழைய பாரம்பர்யக் காங்கிரஸ்காரர்கள் மனவேதனையிலே மல்லாடி, கட்சி வேகத்தை அவர்களே குறைக்குமளவிற்கு குணமாறுபாடடைந்தார்கள் - பாவம்! 1962-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: இத்தகைய ஒர் இக்கட்டான சூழ்நிலையின் போதுதான், மூன்றாவது பொதுத் தேர்தல் 1962ஆம் ஆண்டிலே நடைபெற்றது. 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் 155 சட்டமன்றத் தொகுதிகளிலே போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, இப்போது 139 - இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல, ஐம்பது இடங்களைக் கைப் பற்றியிருந்த கம்யூனிஸ் டுகள் 15 ஆகி, அதிலிருந்து 4 ஆகி, இப்போது இரண்டே இரண்டு இடங்களை மட்டுமே பிடித்தார்கள். 1957- ஆம் ஆண்டில், 15 சட்டமன்றத் தொகுதிகளிலே வாகை சூடிய தி.மு.கழகம், 1962-ல், 50 இடங்களைக் கைப்பற்றியது. தலைவர் காமராஜ் அவர்கள், 1957ல் வெற்றி பெற்ற 15 சட்டமன்ற உறுப்பினர்களையும் தோற்கடித்து விடுவது என்ற ஒரு தேர்தல் வியூகத்தை வகுத்தார்! அதற்கேற்ப, அறிஞர் அண்ணா உட்பட்ட அனைவரையும் தலைவர்காமராஜர்தோற்கடித்துக்காட்டினார் தப்பிப்பிழைத்தவர் ஒரே ஒருவர்தான்! அவர் கலைஞர் கருணாநிதிதாம் அவர்கூட, தொகுதிவிட்டுத் தொகுதி மாறிப் போட்டியிட்டதால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது! காமராஜ் மீண்டும் முதல்வரானார்? தலைவர் காமராஜ் அவர்களின் கட்சிப் பலம் குறைந்திருந்தாலும், மீண்டும் அவரே ஆளுநர் விஷ்ணுராம் மேதியின் முன்பு முதல்வராகப் பதவி ஏற்று, ஒன்பது பேர்கொண்ட அமைச்சரவையை அமைத்தார்: இந்தியாவிலேயே, அப்போதிருந்த மந்திரி சபைகளில், தலைவர் அவர்கள் அமைச்சரவைதான் மிகச் சிறிய சபையாக விளங்கியது.