பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 தேசியத் தலைவர் காமராஜர் தலைவர் காமராஜ் அவர்கள், மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானதும், அரசு நிர்வாகத்திலே கோப்புகள் எல்லாம் தாமதமாகச் செல்லும் சிவப்பு நாடா முறையை ஒழித்துக் கட்டினார்: காமராஜரின் உச்சகட்டம் தமிழகக் காங்கிரஸ் கட்சியிலே தலைவரை எதிர்த்துப் பேசுவோர் ஒருவரும் இல்லை. மத்திய ஆட்சியிலும் . தமிழகத்திலும் தலைவர் காமராஜ் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்ற அளவிற்குச் செல்வாக்கு உச்சகட்டமாக உயர்ந்து நின்றது இதற்குக்காரணம், தமிழக ஏழை மக்கள் மீது தலைவர் வைத்திருந்த பாசமும் பற்றும் மனிதநேயமுமே தவிர, வேறு ஒன்றுமில்லை. எந்தத் திட்டம் தீட்டினாலும், அதனால் ஏழைக் குடிமகன் ஏற்றம் பெறுவானா? என்று எண்ணியே தலைவர் காமராஜ் செயல்பட்டார். உதாரணமாக உரைப்பது என்றால், "இதோ காமராஜர் பேசுகிறார் - கேளுங்கள் தினமணியில் செய்தியாக: "அத்தனை பேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? அவனுந்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்திலேயே சோறுபோட்டுப் படிக்க வைக்கணும். இது மிக முக்கியம். உடனடியாகத் தொடங்கிவிடணும்.' 'இதற்குப் பணத்திற்கு எங்கே போவது என்று கேட்பீர்கள். வழி இருக்கிறது. தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தனியாக வரிபோடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கணும். அதனால், மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர்ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்.” -'காலத்தின் கடைசிக் கருணை' தமிழருவி மணியன் 'தினமணி 15.7.95 இரவும் பகலும் இவ்வாறாக ஏழை மக்களைப் பற்றியே பேச்சும் எண்ணமும் அவரிடம் இருந்ததால்தான், அவர் ஏழை பங்காளர்கட்கெல்லாம் நல்வாழ்வு ஏணியாக நிற்க முடிந்தது. தலைவர் காமராஜரின் எளிய வாழ்வு, முக்கால் கை சட்டையிலும், நான்கு முழத் துண்டு வேட்டியிலும் அவரின் ஏழ்மையின் தோற்றம் எதிரொலித்தது பொது வாழ்விலே நேர்மை