பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 365 வேண்டுமா? இதோ பாருங்கள் அவரைப் பற்றி தினமணி' நாளேட்டில் தமிழருவி மணியன் எழுதும் சத்தியச் சிந்தனைகள்: 'காங்கிரஸ் பேரியக்கத்தின் பொன் விழா 1935 - டிசம்பர் 28 - ஆம் நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.” 'தலைவர் காமராஜ் விருப்பப்படி விருது நகரில் பொன்விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்ததும் வரவு - செலவுக் கணக்கைச் சரிபார்க்க விழாக்குழு கூடியது." 'வரவுக்கும் - செலவுக்கும் 67 ரூபாய் 3 அனா வித்தியாசம் வந்தது. தலைவர் காமராஜ் விளக்கம் கேட்டார்.” 'எப்படியோ செப்த செலவை எழுத மறந்து விட்டேன். என்மேல் நம்பிக்கை வைத்து வித்தியாசத் தொகையைத் தள்ளுபடி செய்து விடுங்கள் என்று தலைவரின் நெருங்கிய நண்பர் முருக - தனுஷ் கோடி வேண்டினார்: 'பொதுப் பணத்தைப் பொறுப்பாகக் கையாள வேண்டும். அரை மணிநேரம் அவகாசம் தருகிறேன். கணக்கைச் சரியாக எழுதிக் கொடு. இல்லையென்றால், 67 ரூபாய் 3அனாவைக் கட்டிவிடு' - என்று கட்டளையிட்டு விட்டார் தலைவர் - 'தினமணி 15.7.95 எதற்குச் செலவு செய்தோம் என்பதை மறந்துவிட்ட முருக - தனுஷ்கோடி அந்தப் பணத்தைத் தனது மறதிக்குத்தண்டனையாகச் செலுத்தி விட்டார். இதே சம்பவத்தை 'நவசக்தி என்ற நாளேட்டின் ஆசிரியராக இருந்த முருக - தனுஷ்கோடி என்ற காமராஜரின் பிரம்மசாரி நண்பர், தாம் எழுதிய காமராஜ் ஒரு சரித்திரம் என்ற நூலிலும் எழுதியிருக்கின்றார். இதோ: 'தலைவரின் ஒழுக்க வாழ்வு, சுயநலமற்ற தன்மைக்கு உதாரணம் தேவையா? இதோ படியுங்கள் சம்பவத்தை! மாதந்தோறும் மகன் அனுப்பிய 120 ரூபாயில், நியாயமான தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் தன் மகனைக் கேட்கிறார் பாருங்கள். 'மகனே! நீ முதலமைச்சரான பிறகு என்னைப் பார்க்கப் பலர் வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு சோடா, கலர் தருவதனால் செலவு கூடுகிறது. இனிமேல் மாதம் 120 ரூபாய்க்குப் பதில் 150 ரூபாய் அனுப்பினால் நல்லது.” என்று அன்னை சிவகாமி மகனிடம் தயக்கத்துடன் கேட்டார்.