பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 தேசியத் தலைவர் காமராஜர் அதற்குத் தலைவர் அம்மாவுக்கு எழுதிய பதில் என்ன தெரியுமா? இதோ: 'அம்மா வீடுதேடி வருபவர்களுக்கு நீ சிரமப் பட்டு செலவழிக்க வேண்டியதில்லை. சோடா, கலர் தருவதை நிறுத்து. 120 ரூபாயிலேயே குடும்பத்தைச் சிக்கனமாக நடத்து.' என்றார் முதலமைச்சர் காமராஜர் தன் தாயாரிடம் மடல்வழி. ' காமராஜர் அவர்கள் வாழ்ந்த வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. வீட்டையொட்டி ஒரிடம் விலைக்கு வருவதாகவும் அதன் விலை மூவாயிரம் ரூபாய் என்றும், அதை வாங்கினால் கழிப்பறை கட்டிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்றும் தாயார் தனது மகனுக்கு அஞ்சல் வரைந்தார்.” அன்னையார் வரைந்த அஞ்சலுக்கு அவரது ஒரே மகன் அனுப்பிய பதிலஞ்சல் என்ன? படியுங்கள் இதோ:

  • நீ கழிப்பறைக்கு இடம் வாங்க வேண்டும் என்கிறாய். ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கிவிட்டதாகச் சொல்லுவான். அப்படியே சிலர் பத்திரிகையிலும் எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம் போ',

இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை ஒழுக்க சீலரை நாணயமான அரசியல்வாதியை - தாயார் கேட்ட எதையும் செய்யாத ஒரு அருமை மகனை வரலாற்றிலே தேடுங்கள்! இருந்தால் கூறுங்கள் உலகுக்கு உணர்த்துவோம் சில புதிய அரிச்சந்திரர்களை தலைவர் காமராஜருடைய ஓயாத உழைப்புதான், அவரது செல்வாக்கை மென்மேலும் நாட்டு மக்களிடத்திலே உயர்த்தியது மேன்மை தந்தது! அதற்குரிய நற்சான்றிதழ் வேண்டுமா வரலாற்றுக்கு? இதோ:'தினமணி நாளேடுதுணைத் தலையங்கம் காணுங்கள்: தினமணி நாளேடு 14-7-95ல் துணைத் தலையங்கமாக எழுதியிருப்பதாவது: 羲

豪 .# o: |

ఖీ { سم 会° -" %