பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ காமராஜர் நிர்வாகப் பா ஆந்திர முதல்வர் பின்பற்றினார்: 'நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அப்போதைய முதல்வர் காமராஜர் கடைப்பிடித்த அரசியல் பாணியை, ஆந்திர முதலமைச்சர் ராமாராவ் இப்பொழுது அனுசரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். 'அரசு இயந்திரத்தைக் கிராமங்களுக்கே கொண்டு செல்லும் திட்டம் அது." மக்களின் குறைகளை அவர்களுடைய ஊருக்கே சென்று நேரில் கேட்டறிந்து, அந்த இடத்திலேயே பரிகாரம் செய்வதற்காக, ஆந்திரம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இதற்கு வகை செய்ய, அவரோடு அமைச்சர் பரிவாரங்களும்-அரசுத்தலைமையகத்தின்அதிகாரிகளும் கூடவே செல்வார்கள். - 'அரசு இயந்திரத்தை மக்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்லும் இந்தத் திட்டத்தை முதன் முதலில் நடத்தி சரித்திரம் படைத்தவர்காமராஜரே! 'அதற்கும் ஒரு பின்னணிஉண்டு. 1954இல், காமராஜர்எதிர்பாராத சூழ்நிலையில் முதலமைச்சர் பீடத்தில் அமர நேரிட்டது. 'அவ்வளவுதான், அதிகாரிகள் வட்டாரத்தில் ஒரு கிசுகிசுப்பு உலவியது. ஆங்கிலம் படிக்காத காமராஜரால் கோப்புகளை எப்படிப் பார்க்க முடியும்? என்பதே அந்த அரசியல் கிசுகிசுப்பு. “இத்தகைய முணுமுணுப்பில் லேசான நையாண்டி ரேகையும் மின்னியதுண்டு. படித்தவர்களும் - அதிகாரிகளும் அரசு நிர்வாகம் என்றால், அது கோப்புக்களைப் பார்ப்பது என்ற அளவுக்கே முடக்கி வைத்திருந்தார்கள். 'இந்த மாயையை உடைத் தெறிவதற்காக, அரசாங்க இயந்திரத்தைப் பொதுமக்களிடமே கொண்டு செல்லும் இந்த நூதன திட்டத்தைக் காமராஜர் வகுத்தார். 'அதன் மூலம், அரசு நிர்வாகம் என்றால், அதுகோப்புக்களைப் பார்ப்பது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்ப்பது மக்களுக்குப் பதில் சொல்வது என்பதை, இத் திட்டத்தின் மூலம் அதிகாரிகளுக்குப் புரிய வைத்தார் காமராஜர்.