பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 தேசியத் தலைவர் காமராஜர் "அதிலிருந்து, காமராஜரின் உண்மைச் சொரூபத்தைப் புரிந்து கொண்டஅதிகாரவர்க்கம், அவரிடம் அச்சம்கலந்த மரியாதையோடு நடந்து கொண்டது. 'அந்தத் திட்டம் , மக்கள் தலைவராகிய காமராஜருக்குப் பொருத்தமாக இருந்தது. அவர் வாழ்நாள் முழுவதையும் மக்களிடையே கழித்தவர். மக்களின் சுகதுக்கங்களை அறிந்தவர். 'அரசியல் பதவிகள் எதுவாயினும், அது மக்களைக் கைதுக்கி விடுவதற்கானகருவி என்றே கருதியவர்தலைவர்காமராஜர். ஆகவே அத்திட்டம் காமராஜரைப் புதிய கோணத்தில் இனம் காட்டியது. "அதோடு, அதிகாரிகளுக்கும், ஜனநாயகத்தில் நிர்வாகத்தின் கடமை என்ன என்பதை உணர்த்தியது. அத்திட்டம் அவருக்கு அழகாக இருந்தது. ஏனெனில், சாமான்ய மக்களோடு எளிமையாகவும், கல கலப்பாகவும் பழகியவர்காமராஜர். 'ஆனால், ராமாராவோ இப்பொழுது படங்களில் நடிக்கா விட்டாலும், 'தெய்வீக நடிகர் என்ற கவர்ச்சி வடிவத்தைக் கொண்டிருப்பவர். மக்களோடு சகஜமாகப் பழகுபவரல்ல. 'எனவே, காமராஜரின் பாணி, ராமாராவின்புதிய பாத்திரத்திற்கு எவ்வளவு தூரம் பொருந்துமென்று இப்போதைக்குக் கூறுவதற்கில்லை.” 'தினமணி. 14.7.95 (துணைத் தலையங்கம்) தலைவர் காமராஜ் அவர்கள், தனது ஆட்சியைக் கிராம ராஜ்ஜியமாக்க முயன்றார்! காந்தியடிகள் கனவு கண்ட ராமராஜ்ஜியத்தை உருவாக்க முயன்ற வரலாற்று மேதை காமராஜர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றுரை வேண்டும்? நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் காமராஜர் கொண்டு வந்த மனு நீதி நாள் திட்டத்தை, ஆந்திர மாநில முதல்வர் என்.டி.இராமாராவ் 1995 இல் 'தமிழக அரசியல் மேதை மக்கள் நாயகன்காமராஜ் அவர்களைப்போல பின்பற்றி, எனது ஆட்சியையும் ஏழை மக்களிடம் எடுத்துச் செல்வேன்' என்று கூறுகிறார் என்றால், இதைவிடவரலாற்றுநோக்கு, ஏழை மக்கள் நல்வாழ்வு நோக்கு வேறு ஒன்று உண்டா? - அந்த மக்கள் மனு நீதி நாள் என்ற திட்டத்தில் தலைவர்காமராஜ் வெற்றி பெற்றார் திரு. என்.டி. ராமாராவ் அவர்களும் அவரைப் போலவே நிர்வாகப் பாணியில் வாகை சூடியிருந்தால் வாழ்த்தும் அவரை வரலாறு: