பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தேசியத் தலைவர் காமராஜர் இந்திய காங்கிரஸ் கட்சி தோன்றிட, அதற்கு முதன் முதலாகக் கால்கோள் விழா நடத்தப்பட்டது தமிழ் மண்ணிலே தான் என்பதற்கான சான்று அதன் வரலாற்றிலேயே உள்ளது. ஆலன் அக்டேவியன் ஹியூம் என்ற வெள்ளைக்காரர், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தது ஏன்? அவர் யார்? ஏன் தோற்றுவித்தார் காங்கிரஸ் கட்சியை ? எவ்வாறு உருவாக்கினார் என்ற வரலாற்றை இந்த நேரத்தில் நாம் நோக்கல் நலமல்லவா? திரு ஆலன் ஆக்டேவியன் ஹியூம், இங்கிலாந்து நாட்டிலே பிறந்தவர்; அவருடைய தந்தையார் அங்கே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; ரேடிகல் பார்ட் டி (RAD; CAi PARTY) என்றதோர் தீவிரவாத கட்சியைப் புதிதாக அங்கே ஆரம்பித்தார் அவர் அந்தக் கட்சி பிற்காலக் காங்கிரஸ் கட்சியைப் போன்ற ஒரு தீவிரவாதக் கட்சியாகும். திரு ஹியூம், ஐ.சி. எஸ். என்ற இந்தியன் சிவில் சர்வீஸ் கல்வியிலேபட்டம்பெற்றவர். ஆங்கிலேயர்ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவில் வங்காள மாநிலத்தில் மாவட்டத் துணை மாஜிஸ்திரேட்டாக, மாவட்ட துணை ஆட்சியாளர் என்ற அதிகாரியாக, கி.பி.1849-ஆம் ஆண்டு எட்டாவா என்ற நகரிலே பணியாற்றினார். விவசாயத்துறை, வணிக வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய அவர், தனது திறமையினால் அரசுத் துறைச் செயலாளராக உயர்ந்தார்: இந்தியாவில், 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் என்ற புரட்சி சம்பவத்தில், ஆங்கிலேய ஆட்சி அவரையும் ஒரு சாட்சியாக நியமித்தது. அதே நேரத்தில் அந்த வரலாற்றுச் சம்பவத்தை ஆராயவும் அவர் ஆர்வம் கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாகத்திற்கும் - அவருக்கும் இடையே உருவான சில மனித நேய எதிர்ப்பு மன வேறுபாடுகளால், அவர் கி.பி. 1879-ஆம் ஆண்டு பதவியிலே இருந்து விலகினார். திருசர்வில்லியம் வெட்டர்பான் என்ற அவரது நண்பர்; ஹியூம் அவர்களது சரிதையை எழுதினார். அந்த வரலாற்றில், ஹியூம் மிகமிக நேர்மையானவர், எந்த அரசியல் கட்சியினையும் சேராதவர் என்று குறிப்பிட்டார் இந்த வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர்தான், 1889-ஆம் ஆண்டு, பம்பாய் மாநகரில் நடைபெற்ற அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை வகித்தவர்!