பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47) காமராஜர் வாழ்க்கை அரசியல்வாதிகளுக்கு அறம்! தலைவர்காமராஜ் அவர்களது அன்றாட வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்! அதனுள்ளே சுயநல மர்மங்கள்- பொருளாசை மூடு மந்திரங்கள். சூதுவாது சகுனித் தன்மைகள்- அரசியல் மாயா ஜாலங்கள் ஏதுமில்லை ! எழு ஞாயிறு எழுந்ததும் ஒரு கோப்பை காஃபி பிறகு, எல்லாப் பத்திரிகைகளையும் ஊன்றி ஊடுருவி உற்று நோக்கல் தொடர்ந்து படித்து முடித்த பிறகே, பிற சிந்தனைகள்! அதற்குள்ளாகத் தன்னைக் காண வந்திருப்போர் யார் யார்? எவ்வளவு பேர் இருப்பர் என்று கணக்கெடுப்பார்: காமராஜர்பார்வையாளர் பிறகு வருவார்! அதற்குள், தலைவர் சம்பந்தப்பட்ட எல்லாக் கடிதங்களையும் பார்ப்பார் அவற்றிற்கு உடனே பதிலஞ்சல் அனுப்ப ஆணையிடுவார். மீண்டும் மாடிக்குச் சென்று குளியல் முடிப்பார் நான்கு முழம் கதர் வேட்டி நாடாளும் நாயகனுக்காகக் காத்திருக்கும் கால் முட்டியை எட்டித் தொடும் முக்கால் கை சட்டை அவருடைய கார்மேனி உடலை அலங்கரிக்கும்! பிறகு ஒரு மேல் துண்டு! அடுத்து, சிற்றுண்டி முடிப்பார். மதிய உணவு மரக்கறி உணவாகவே அமையும் எப்போதாவது முட்டை சாப்பிடுவார் மாலையில் ஒரு கோப்பை காஃபி இரவில் இட்லி சட்னி அவ்வளவுதான் அவரது தேவைகள் என்றாவது ஒரு நாள், அதிக வேலைப் பளுவிலே ஈடுபட்டு விட்டால், அந்தக் களைப்பைக் களைய ஒட்டலிலிருந்து ஒரு தோசை அல்லது ரொட்டி வாங்கி வரச் சொல்லி உண்பார்: எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடிடும் வழக்கம் தலைவருக்கு இல்லை. அதற்காக, மற்றவர்கள் கொண்டாடும் பழக்கத்திற்கு என்றுமே தடையாக இருந்ததும் இல்லை. இறுதிவரை தலைவரின் உண்மை விசுவாசியாக வாழ்ந்த வைரவன் குடும்பத்திற்குப்பணம் கொடுத்து பண்டிகை கொண்டாட வைப்பார்.