பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37C தேசியத் தலைவர் காமராஜர் காமராஜ் அவர்கள்தன்னைக்கான வருகை புரிவோரிடம் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த மதம் இந்த மதம், அந்தக் கட்சி இந்தக் கட்சி, பணக்காரன் - ஏழை என்ற பேதங்களையோ ஏற்றத் தாழ்வுகளையோ பார்க்க மாட்டார்! எல்லாரும் சமம் அவரது பார்வையில் எங்கும் சமத்துவம் அவரது கொள்கையில். அதனால்தான், அவரை எல்லா இன, மத மக்களும் பாசத்தோடு நேசித்தார்கள். தனது இல்லத்திலே இருந்து அமைச்சரவை அலுவலகத்துக்கு 1 மணி அல்லது 11-30 மணிக்குப் புறப்படுவார். அவர் அமர்ந்துள்ளகார்புறப்பட்டதும், 'பெரியவர் புறப்பட்டு விட்டார் என்று அலுவலகத்திற்குத் தகவல் போய்ச் சேரும். அலுவலகத்திற்குள் தலைவர் சென்றதும் அங்கே குழுமியுள்ள பார்வையாளர்களை நோக்குவார் அவரவர்களை விசாரித்துத் தேவைகளை அறிந்து உடனுக்குடன் உரியவற்றைச் செய்து உற்சாகமுடன் அனுப்புவார். ஏதாவது முக்கியமான விவகாரங்களைப் பற்றிப் பேச்சுக்கள் நடந்தால், மறுநாள் காலைவரைக் கூட அவை தொடரக்கூடும். அதற்குமேல் சிறிது நேரம் துயில் கொள்வார். ஆனால், வழக்கம்போல எழுஞாயிறுக்கு முன்பே எழுவார். மதியம் உணவுண்ட பின்பு சிறிது உறக்கம் கொள்ளும்பழக்கமும் அவரிடம் உண்டு! யாராக இருந்தாலும் சரி, அவர் பொறுமையுடன் பேசுவார்! அவர்கள் கூறுவதை நிதானமாகக் கேட்பார். சில நேரங்கள் சிறு சினம் சீறி வரும். அந்தக் கோபம் கூட, பார்க்க வருவோர் பண்பாடுகளுக்கேற்பவே வரும். பிறகு, கோபப்பட்டவரிடம் அமைதியான முறையில் அளவளாவி அவர்களை மகிழ வைத்தனுப்புவார். சென்னை தியாகராய நகர் திருமலைப் பிள்ளை வீதியில் தலைவர் காமராஜ் குடியிருந்த தனி வீட்டிற்குத் தொண்ணுாறு ரூபாய் அவர் வாடகைக் கொடுத்தார். பிறகு, 150 ரூபாய் வரை அதை உயர்த்திக் கொண்டே சென்றார். அவர் முதலமைச்சரானதும் அதே வீட்டிற்கு அரசு 250 ரூபாய் கொடுத்தது - அந்தப் பணத்தை வாடகைக்காக அப்படியே வீட்டுக்காரரிடம் திருப்பிக் கொடுத்து விடுவார். அந்த நேரத்திலேயே அவர் வாழ்ந்த வீட்டிற்கு, ஏறக்குறைய 800 ரூபாய் வாடகை தரும் மதிப்புள்ள அந்த வீட்டிற்கு, அதன் உரிமையாளர் கொஞ்சம் கூட்டித் தருமாறு அவரிடம் கேட்டார். “என்னுடைய சம்பளத்தில் இதற்கு மேல் எப்படி அதிகமாகத் தர முடியும்?' என்பார். வீட்டுக்காரரும் சிரித்துக் கொண்டே போய்விடுவார்.