பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 தேசியத் தலைவர் காமராஜர் நரிக்குறவர்கள் வீடு கேட்டு வருவார்கள். உடனே அதற்கானவற்றைச் செய்து கொடுக்கத் தலைவர் கட்டளையிடுவார். தண்ணிர், மின்சார வசதிகளுக்காக ஏழைக் குடியானவர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். தனது உதவியாளர்களை அழைத்து அந்தந்த துறைகட்கு ஆணையிட்டு உடனே செய்யச்சொல்வார்காமராஜர். காங்கிரஸ் தியாகிகளின் துன்பங்களைப் போக்கவும், அவர்களுக்கு அரசு மூலம் உதவிகள் கிடைக்கவும் காமராஜ் அவர்கள் உறுதுணையாகவிளங்கினார். கஷ்டப்படவிடமாட்டார்.அவர்களை, முடிந்ததைச் செய்து அனுப்புவார். மேலே சொன்னவற்றை பொ. க. சாமிநாதன் அவர்கள், தான் எழுதிய மூன்றுதலைவர்களுடன் என்றநூலில் குறிப்பிட்டுள்ளார். ஜீவாவை மதித்த மனித நேயர்: காலம் சென்ற கம்யூனிஸ்டு தலைவர் ப. ஜீவானந்தம் அவர்கள், காமராஜர்முதலமைச்சராக இருந்த ஆரம்பகாலத்தில்தாம்பரம் நகர்ப் பகுதியிலே உள்ள குடிசை வாழ் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தினார். ஒர் ஆரம்பப் பள்ளியைத் தாம்பரம் பகுதியில் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்குத் தலைவர் காமராஜர் சென்றபோது, ஜீவானந்தம் குடியிருக்கும் வீடு இதுதான் என்று உடன் சென்றவர்கள் தலைவருக்குக் காட்டினார்கள். உடனே, காரை ஜீவா வீட்டருகே நிறுத்தச் சொல்லி, தலைவர் காமராஜர் ஜீவாவின் குடிசைக்குள் நுழைந்தார். அந்த வீட்டின் மேல் கூரை பிய்ந்து விட்டிருப்பதைப் பார்த்தார்; மனம் வருந்தினார். தலைவர் காமராஜ் அவர்கள், ஜீவா அவர்களைப் பார்த்து, "என்ன இந்த வீட்டில் குடி இருக்கிறீர்கள்!' என்று கேட்டார். 'எல்லாரையும் போலத்தான் நானும் என்று ஜீவா அதற்குப் பதிலளித்தார். “தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியைத் திறந்து வைக்க வந்தேன்! இதுவா உங்களுடைய வீடு என்றார்கள். அதனால் உங்களையும் பார்க்கலாமே என்று வந்தேன்' என்றார்காமராஜர். இரு ஏழைபங்காளர்களையும் பார்த்த குடிசை வாழ் மக்கள் கையொலி எழுப்பி வாழ்க என்று முழக்கமிட்டார்கள். ஜீவா சட்டசபை உறுப்பினராக இருந்தபோது அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் காமராஜர். அவர் உயிரோடு இருக்கும் போதே கட்டி முடிக்கப்பட்டு அதைக் காமராஜரே திறந்தும் வைத்தார்.