பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 373 காமராஜ் அவர்கள் ஜீவா அவர்களிடம் பேசி, அவர்களை ஒரு நல்ல வீட்டில் குடியிருக்கச் செய்திட, சம்மதத்தைப் பெற்று, அதற்கான ஏற்பாடுகளையும் உடன் செய்து கொடுத்துக் குடியேறச் செய்தார். ஜீவா அவர்கள் நோயினால் மரணவேதனை பட்டபோது ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். காமராஜருக்கு போன் செய்யுங்கள்” என்று ஜீவா ஆவி பிரியும் போது கேட்டுக் கொண்டாராம்! ஜீவா அவர்கள் இறந்த பின்பு, அவரது துணைவியாரும் - பிள்ளைகளும் வறுமையால் வாடுவதைக் கேள்விப்பட்டதலைவர் காமராஜர் அவர்கள், அவருடைய துணைவியார் பத்மாவதி அம்மையாருக்கு அரசு வேலையைத் தருமாறு ஆணையிட்டார். ஜீவா அவர்கள் ஏழைபங்காளர் ஏழைகளுக்காகவே உழைத்தார். காமராஜ் அவர்களும் ஏழைபங்காளர் ஏழை ஜீவா அவர்களுக்கு மனிதநேயத்தோடு உதவி செய்தார் ஜீவா அவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தவர். பிறகுதான் கம்யூனிஸ்ட் கொள்கைக்கு மாறினார். தமிழ்நாட்டைக் காமராஜர் சோஷலிசப் பாணியில் நடமாட வைக்க உழைத்தார்! அதனால் ஏற்பட்ட இலட்சியப் பிடிப்பு - நட்பு, இருவருக்கும் இணைந்தது. ஜீவா அவர்கள் தனக்கென ஏதும் சொத்து சுகம் சேர்க்காத அனுபவிக்காத ஏழையாக வாழ்ந்து செத்தவர் ஏழைகளை வாழவைக்கப் புறப்பட்ட ஏந்தல் காமராஜரும் அதே நிலையில்தான் மறைந்தார். -