பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதேர்தல் வியூகி மானத்தோடு வெற்றி பெற்றவர்: திராவிட முன்னேற்றக் கழகம், 1957ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், 15 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1962ஆம் ஆண்டில் அதே கட்சி 50 இடங்களில் வாகை சூடியது. அதனுடைய படிப்படியான வெற்றியும் வளர்ச்சியும், தலைவர் காமராஜரின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு மன நெருடலாகவே அமைந்தது! 1967-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், தி.மு.க.கட்சி ஆட்சியைப் பற்றி விடலாம் என்ற சுறுசுறுப்புக் கொண்டு விறுவிறுப்பாக வளர்ந்து கொண்டே வந்தது. காமராஜர் பேசுகிறார் அந்த நேரத்தில் தலைவர் காமராஜர், காங்கிரஸ் கட்சிப் பொதுக் கூட்டங்களில் பேசும்போது சற்று ஆத்திரத்தோடும் உணர்ச்சி வசப்பட்டும் சில இடங்களில் பேசுவது வழக்கமாக அமைந்துவிட்டது. அவ்வாறு பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில், "அலங்காரமாகப் பேசினா கூட்டம் கூடும்னே திருவிழாவுக்குப் போறவ எல்லாம் பக்தனா? என்ன? அதுபோலத்தான்திராவிடத்தார் அரசியல் கூட்டமும் இருக்குன்னே. அவாளுக்கு வரும் கூட்டமெல்லா கால் டவுசர் போட்டவங்க கூடும் கூட்டம்னே அவா எங்கேயும் கூடுவா கால் சட்டே போட்டவங்க எல்லாம் கூட்டமா கூட்றா ஆட்சியிலே குறை இருந்தா சட்டசபைக்கு வா! மரத்தடியிலும் மைதானத்திலும் பேசினா மக்கள் உங்க பேச்சே கேட்பாங்களான்னே கால் சட்டை போட்ட அவங்களுக்கெல்லாம் ஒட்டுரிமை இல்லேன்னே! கூட்டந்தான் உனக்கு ஒட்டுகள் எனக்குத்தான்னே! என்னா, புரிஞ்சுதா?’ என்று பெருங்கோபமாகப் பேசினார்: