பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 375 அண்ணா பேசுகிறார்: அதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் சைதாப்பேட்டை தேரடிக்கூட்டமொன்றில் தலைவர் காமராஜ் அவர்களுக்கு பதில் கூறும்போது, 'முதலமைச்சர் காமராஜர் நம்மைப் பார்த்து சட்ட சபைக்கு வா’ என்கிறார். 'மரத்தடியும் - மைதானமுமா சட்டசபை?' என்று கேள்வி கேட்கிறார் சவால் விடும் பாணியிலே நம்மைச்சாடுகிறார்: “ஒரு முதல்வர், எதிர்க் கட்சிக்காரர்களைச் சட்ட சபைக்கு வா என்று அழைத்ததால்தான், நமக்கெல்லாம் மூத்தவராக இருப்பவர்க்குரிய மரியாதையைக் கொடுத்தோம். தேர்தலிலே போட்டியிட்டு 15பேர் சட்டசபைக்குள் சென்றோம்! 'இப்போது என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? நமது கூட்டத்திற்கு வருகின்ற எனது தம்பிமார்களைக் காமராஜர் கால் டவுசர் போட்டக் கூட்டம் என்கிறார்! அதற்காக நான் வெட்கப்படவில்லை ஒரு படிமேலே சென்று உங்களுக்கெல்லாம் ஒட்டுரிமை இல்லை என்பதையும் கண்டு பிடித்துள்ளார்: 'காமராஜர், என்று மரத்தடி கிளி ஜோசியராக மாறினாரோ நமக்குத் தெரியவில்லை. கோபம் கொந்தளித்து ஜோசியம் கூறியுள்ளார். ஜோசியம் சொல்பவருக்கு கோபம் வரலாமா? வந்தால் அதன் விளைவுகள் எங்கு கொண்டு போய் விடும்?” கால் சட்டைப் போட்டவர்களால் தான் நமக்குக் கூட்டம் கூடும் என்றால் அதன் பொருளைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு ஒட்டுரிமை இல்லை என்று கிண்டலும் - கேலியுமாகப் பேசி இருக்கிறார். இவ்வளவு கோபம் அவருக்கு ஏன் வந்ததோ புரியவில்லை." 'எனது தம்பிகள், கால் சட்டை போடுகின்றவர்கள்தான். அவர்களுக்கு மீசைகள் கூடச் சரியாக அரும் பாத வயதுதான்! அதற்காக நான் வெட்கப்படவில்லை - வேதனைப்படவுமில்லை. நான்காமராசர் பேச்சிலே உள்ள கேலியை மறுக்கவுமில்லை.” காமராசர் அவர்களே! இன்று கால் சட்டைகளைப் போட்டிருப்பவர்களுக்கு, இன்னும் சில ஆண்டுகள் சென்றால், அப்போது அவர்களுக்கும் ஒட்டுரிமை வரும். என்பதை மறக்காதீர்கள்! அந்த நேரத்தில் ஒட்டுக்களும் எனக்குத்தான் - கூட்டமும் எனக்குத்தான் - காமராசரே'