பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 தேசியத் தலைவர் காமராஜர் 'இன்றைக்கு கால் சட்டை போட்டிருப்பவர்களுக்கு நாளை ஒட்டளிக்கும்காலமும் வரும் அப்போது எனது தம்பிகள்தான்உமது ஆட்சியைப் பிடிப்பார்கள் அந்த நிலை வந்தால், இந்தக் கால் சட்டைக்காரர்களுடைய ஆட்சியை - ஓர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு உங்களால் அசைக்க முடியாது! இதை மறந்து விட வேண்டாம், காமராசரே!” காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் எல்லாம், இப்போது காலத்தின் கடைசி கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் நான் ஏதோ ஆணவத்தோடு பேசுவதாக நினைக்க வேண்டாம்; அடக்கத்தோடு தான் - முதலமைச்சர்காமராசருக்குச்சொல்கிறேன்." 'நீங்கள் எல்லாம்நாளைகாலத்தோடு இணைந்துவிட்டால், நான் இப்படிப் பேசுவதற்காகக் காமராசர் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு பேச்சுக்காக இதைக் கூறுகின்றேன். ஒருவேளை எதிர்பாராமல் அப்படி ஏதாவது நடந்தால், உங்களை எல்லாம் அரசு மரியாதைகளோடு அடக்கம் செய்பவர்களாக இருப்பவர்கள், இந்தக் கால் சட்டைக்காரர்கள்தான் அந்தக் காலம் ஒரு நாள் வரும் மறந்து விடாதீர்கள்.காமராசரே என்று, அண்ணா பேசினார். என்னவாயிற்று இன்றைய காலநிலை ஒர் அரசியல் தீர்க்க தரிசியாக அறிஞர் அண்ணா அவர்கள் அன்று அறிவித்தது போல, 1967ஆம் ஆண்டிலே ஆட்சியைக் காமராசர் பிடியிலே இருந்து கைப்பற்றியது திராவிடர்முன்னேற்றக் கழகம். இன்று.2002ஆம் ஆண்டு இன்றுவரைதமிழகத்தை ஆட்சிபுரிவது அதே திராவிடர்இயக்கப் பரம்பரை அல்லவா? அதாவது, அண்ணா அவர்கள் கூறிய 25 ஆண்டுக்காலக் கெடுவையும் தாண்டி பத்து வருடங்கள் மேலாகின்றன. அது மட்டுமல்ல, 1967ஆம் ஆண்டு முதல் இன்றுவரை காலமாகி விட்ட காங்கிரஸ் தலைவர்களான காமராசர், இராஜாஜி, பக்தவத்சலம், மக்கள் தலைவரான தந்தை பெரியார் போன்ற விலை மதிக்க வொண்ணாததலைவர்களுக்கு எல்லாம், தி.மு.கழகம் எல்லா இறுதி மரியாதைகளையும் - நினைவு விழா நாட்களையும் - அரசு சார்பாக ஆற்றியதுடன் நில்லாமல், நினைவாலயங்களையும் நிலைநாட்டி வருவதைத் தமிழக மக்கள்அறிவார்கள். வியூகம் வகுத்துத் தோற்கடித்தார்! 'சட்டசபைக்கு வா என்று தலைவர் காமராசர் அவர்கள், ஜனநாயகப் பண்பாட்டைப் பின்பற்றி 1957இல், அறிஞர் அண்ணா 15 சட்டமன்ற உறுப்பினர்களோடு சட்ட சபைக்குள் நுழைந்தார்: