பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 377 1962ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது, தலைவர் காமராசர் அவர்கள் தேர்தல் வியூகம் வகுத்து, 14 சட்டமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்தார் மேற்கண்டவாறு தலைவருக்குச் சவால்விட்ட அண்ணா அவர்களும் தோற்கடிக்கப்பட்டார்: ஆனால், தலைவர்காமராசர்நினைத்தது ஒன்று நடந்தது வேறு. விட்டது. தலைவர் காமராசர் அவர்கள் திட்டமிட்டுப் பதினான்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்த தேர்தல் வியூகத்தை எதிர்த்து, தி.மு.கழகம் 50 சட்டமன்ற உறுப்பினர்களோடு சட்ட சபைக்குள் நுழைந்துவிட்டது! தலைவனில்லாத படைபோல! போதாத குறைக்கு, சென்னை மாநராட்சியை வேறு தி.மு.க. ஏற்கனவே பிடித்து விட்டது. காமராஜருக்கோ இது அதிர்ச்சியை அளித்தது! தலைவர் காமராஜர் ஒட்டு வேட்டை! தலைவர் காமராஜர் அவர்கள் தேர்தல் நிதி திரட்டுவதிலும் -பிரசாரங்கள் புரிவதிலும், நேர்மை-கண்ணியம்-நாணயத்தைக் கடுமையாகக் கடைப் பிடித்தவர் சில நேரங்களில் அவருக்குக் கோபம் வரும்போதுதான், காங்கிரஸ் வெற்றியைப் பெரிதாகக்கருதி, உண்மைகளை மக்களுக்கு உணர்த்திட எதிர்க்கட்சிகளது குறைபாடுகளைச்சுட்டிக்காட்டுவார் 1962ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது, சென்னை மண்ணடி பிராட்வே பகுதியிலும், துறைமுகப் பகுதியிலும், தலைவர் காமராசர் காங்கிரஸ் வேட்பாளரான ஜனாப் ஹாஜா ஷெரீப்பை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக அதே பகுதிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தி.மு.க. வேட்பாளருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். - பிராட்வே சாலையிலே உள்ள பிராட்வே திரையரங்கில் அப்போது புரட்சி நடிகர் நடித்த வேட்டைக்காரன்' என்ற திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. தேர்தல் பிரசாரம் புரிய வந்த தலைவர்காமராசர், ஜீப் வண்டியிலே பேசிக்கொண்டு வரும்போது கூடியுள்ள கூட்டத்தினிடையே சிறு குழப்பம் ஏற்பட்டது ! அதைப் பார்த்ததலைவர்காமராசர்.அவர்கள், குழப்பம் செய்தாஒட்டு வந்துடுமான்னே சலசலப்பு காட்டாதேன்னே! மக்களைக் குழப்பாதீங்க! உங்களிடம் ஒட்டுக் கேட்க என் பின்னாலே வேட்டைக்கார வருவான்னே!ரிக்ஷாக்காரவருவா! மக்கள் ஏமாறக்