பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 தேசியத் தலைவர் காமராஜர் கூடாது ஜாக்கிரதையா இருக்கனும்னே" என்று, புரட்சி நடிகர் மீது கோபப்பட்டு பிரசாரம் செய்தபடியே தலைவர்காமராஜர்சென்றார்: வேட்டைக்காரன், ரிக்ஷாக்காரன் என்ற இரண்டு படங்களிலும் மக்கள் திலகம் நடித்திருந்ததால் தலைவர் காமராஜர் அவ்வாறு குறிப்பிட்டார். தேர்தலில் சாணக்கியர்! தலைவர் காமராஜ் அவர்கள், 1967ஆம் ஆண்டுவரை, தான் உழைத்துவளர்த்தகாங்கிரஸ் பேரியக்கத்தை வேறு எந்தக் கட்சியின் காலிலும் சரணடைய வைக்காமல் அரசியல் மானத்தோடு தேசிய பாரம்பர்யச் சுயமரியாதையைக் காத்தே வாழ்ந்தார் காமராஜர், தேர்தலில் ஒரு சாணக்கியர், தேர்தல் புலி தனது சொந்த ஆட்சிச் செல்வாக்குப் பலத்திலே காங்கிரஸ் கட்சியைத் தேர்தல் களங்களிலே நிறுத்தி வெற்றியைத் தேடித் தந்தார் தேர்தல் நாள், அறிவிக்கப்பட்ட உடனே, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைத்தார்காமராஜர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது முதல், அவர்கள் வாக்குகள் ஒட்டுப் பெட்டிக்குள் பதிவாகும் வரை, ஒரு தேர்தல் ஆசானைப் போலவே தனது கட்சிக்காக அவர் அரும்பாடு படுவார் பயிற்சி கொடுப்பார் தொண்டர் அணிகளுக்கு! வெற்றிக்குரிய வழிவகைகளைப் போதிப்பார்: காங்கிரசின் பலம் அறிவார் எந்தத் தொகுதியில் யார் யார் இதற்கு முன்பு போட்டி யிட்டார்கள்? எப்போது போட்டியிட்டார்கள்? எவரை எதிர்த்து எந்தெந்தக் கட்சியின்சார்பாகப் போட்டியிட்டார்கள்? எத்தனைபேர் அந்தத் தொகுதியிலே நின்றார்கள்? எந்த ஜாதி ஒட்டுக்கள் அந்த தொகுதியிலே வெற்றியை நிர்ணயிக்கும்? எவ்வளவுக்கெவ்வளவு ஒட்டுக்களை ஒவ்வொரு வேட்பாளர்களும் அந்தத் தொகுதியிலே பெற்றார்கள்? எவ்வளவு ஒட்டுக்கள் மொத்தம் பதிவாயின? அவற்றிலே காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் எவ்வளவு? இடையிலே அந்தத் தொகுதியில் ஏதாவது மாற்றங்கள் உண்டாயினவா? என்ற நினவாற்றல்களை எல்லாம் தலைவர் காமராஜ் தனது மனத்துள்பதிய வைத்துக் கொண்டு பணியாற்றுவார்: அதனால் தான், அவர் தேர்தல் கலையிலே வித்தகராகவே விளங்கினார் தேர்தல் புலி என்று மற்றக் கட்சித் தலைவர்களும் அவரைப் பாராட்டினார்கள்....