பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 25 அரசு பணியிலே இருந்து விலகிய அதிகாரியான திரு. ஹியூம், அவரது தந்தையார் ஆரம்பித்த ரேடிகல் பார்ட்டியைப் போன்ற ஒரு தீவிரவாதக் கட்சியை இந்தியாவிலும் உருவாக்கத் திட்டமிட்டுச் செயலாற்றினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பட்டதாரி மாணவர்களுக்கெல்லாம், அவர் பகிரங்கமான ஒரு சுற்றறிக்கை அழைப்பை 1883-ஆம் ஆண்டு விடுத்தார்: அந்த அறிக்கையில், 'கல்கத்தாபல்கலைக்கழகப்பட்டதாரிகளே! சமுதாயம், அரசியல் - நீதித்துறை போன்ற முக்கியமான எல்லாத் துறைகளிலும் இந்திய நாடு முன்னேற்றம் பெற வேண்டாமா? பட்டதாரிப் பண்பாளர்களே! நீங்கள் இந்த நாட்டின் உணவுக்கு உப்புப் போன்ற சத்துடையவர்கள்; சுயலநலமில்லாதவர்கள். எதற்கும் அஞ்சாதவர்களாக, எதையும் தியாகம் செய்பவர்களாக, இதயபூர்வமாக இந்தியாவை நேசிப்பவர்களாக, நாட்டுக்காக உடல், உயிர், சொத்து அனைத்தையும் இழக்க துணிவுள்ள தியாக மறவர்களாக, நீங்கள் விளங்காத வரை, இந்தியாவுக்கு விடிவு காலமே தோன்றாது. சுதந்திரத்தோடும் - மகிழ்ச்சியோடும் நீங்களும் இந்த நாடும் வாழ வேண்டாமா?' என்று கேட்டார்: திரு. ஹியூம் விடுத்த இந்த வேண்டுகோள் அறிக்கை நல்ல பயனை வழங்கியது. "ஐம்பது பேர்களேனும் வாருங்கள்' என்று அழைத்ததற்கு மாறாக, எழுபத்திரண்டு பேர்கள் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்திடத் திரண்டார்கள் பின்னர் பல வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், படித்த பட்டதாரிகள், செல்வச் சீமான்கள் உட்பட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குத் தொண்டாற்றிடக் கூடிவந்தார்கள்! அப்போதும் பிளேக் நோய்! அப்போது திரண்டுவந்தவர்கள் அனைவரும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை நிறுவிட, மராட்டிய மாநிலத்திலே உள்ள பூனா நகரிலே முதலில் கூடுவது என்று திட்டமிட்டார்கள். பூனா நகரிலே அப்போதுகடுமையானபிளேக்நோய் பரவியிருந்தது. அதைத்தடுக்க பம்பாய் மாநகராட்சித் திட்டமிட்டுக் கடுமையாக நடவடிக்கை எடுத்தது. எலிகளைக் கொல்வது பாபம் என்றும், அவை விநாயகப் பெருமான் வாகனத்தின் தெய்விகச் சின்னங்களென்றும், பாலகங்காதரதிலகர்மக்களிடையே பிரசாரம் செய்தார் வெள்ளையர் எலிவேட்டை நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் புரிந்தார்! பதினெட்டு மாதங்கள் சிறை தண்டனை பெற்றார்!