பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜர் ரிவிழா மகிழ்ச்சி! தமிழகத்தின்தன்னேரில்லாத்தலைவராக விளங்கியதலைவர் காமராஜர் அவர்களுக்கு 1963 ஆம் ஆண்டு, சென்னை மாநகரில் மிகச் சிறப்பாக அறுபதாவது அகவை மணிவிழா நடைபெற்றது. அப்போது தலைவர் காமராஜர் அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராகக் கோலோச்சிக் கொண்டிருந்தார். புத்தம் புது ஆடைகள் ஏதும் பூணாமல், வழக்கம் போல் சலவை செய்த ஆடைகளையே அணிந்து கொண்டு, எளிமையாகவே ஏழ்மையின் தலைவராகவே எதிரொலித்துக் கொண்டாடினார். திருச்சி மாவட்டத் தியாகி, டி.எஸ். அருணாசலம், தலைவர் மணி விழாக் குழுவிற்குத் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர்களால், தலைவர் காமராசருக்குரிய மணிவிழாப் பரிசும் வழங்கப்பட்டது. என்ன தெரியுமா.அது? இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி ஏற்ற லால்பகதூர்சாஸ்திரி அவர்கள், தனது திருமணத்திற்கு வரதட்சனை வாங்குவதை எதிர்த்த சமூக சீர்திருத்தப் பண்பாளர் அத்தகையவரை வரதட்சணை வாங்குமாறு, சாஸ்திரியின் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள்.அனைவரும் வற்புறுத்தினார்கள். அவர் அதை வன்மையாகவே மறுத்தார். விடவில்லை அவரை சாஸ்திரி வீட்டார்கள் அனைவரும்! அதனால், அவரும் பெண் வீட்டாரிடம் திருமண வரதட்சணை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது! என்ன தெரியுமா அந்த வரதட்சணை? சிரிக்காதீர்கள்! “ஒரு கைராட்டினம் சட்டை- வேட்டிக்கான கதர்த் துணிகள்! இவைதான் சாஸ்திரி பெற்ற திருமண வரதட்சணை அதனைப்போலவே தலைவர் காமராஜர் அவர்களும் தனது மணிவிழாப் பரிசாகப் பெற்றவை என்ன தெரியுமா? அறுபது கதர்ப்பைகளில், அறுபது கதர் வேட்டிகள், அறுபது கதர்ச் சட்டைக்கான துணிகள், அறுபது மேல் துண்டுகள், அறுபது கைக்குட்டைகள் அவ்வளவுதான்! எப்படி மணி விழாப் பரிசு?