பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 தேசியத் தலைவர் காமராஜர் ஒருமுதலமைச்சராக இருப்பவர் பெறும் மணிவிழாப் பரிசுகளாஇவை? என்று இக்கால மக்கள் கட்சிகள், தொண்டர்கள் எல்லாம் ஏளனமாக சிரிக்கக்கூடாது சத்தியப் பிரமாணசாட்சி இந்த வரிகள் கண்ணால் நான் நேரில் கண்டவை! - கோவை காளீஸ்வரர் நூற்பாலை உரிமையாளர் மட்டுந்தான், 6000 கெஜம் மல் துணிகளை, தலைவர் காமராஜர் மணிவிழாவின் போது தனது பரிசாக அனுப்பி வைத்தார். அதுபோலவே தலைவர் அவர்களின் 61, 62ஆம் ஆண்டு நினைவு விழாக்கள் நடைபெற்றபோதும், 6100, 6200 கெஜம் மல் துணிகளை, அதே ஆலை உரிமையாளர் அனுப்பி, வாழ்த்தும் தெரிவித்தார். பரிசுப் பொருட்களும் ஏழைகளுக்கே! தலைவர் காமராஜ் அவர்கள் பரிசாகப் பெற்ற அந்தத் துணிகளையெல்லாம், அவை வழங்கப்பட்ட அந்தந்த ஆண்டுகளில், உடைகளற்ற ஏழை மக்களுக்கே கொடுத்து உதவி மகிழ்ந்தார். அவற்றையெல்லாம் விற்றுப் பணமாக்கிக் கொள்ளும் இக்கால அமைச்சர் பெருமக்களாக, கட்சித் தலைவர்களாக அவர் திகழவில்லை அன்று! விழாவன்று மாலையிலே மாவட்டந்தோறும் வந்து குவிந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் - அணிவகுத்த காட்சிகள் மாற்றாரையும் வியக்க வைத்தன. அவ்வளவு பெரிய மக்கள் அணி ஊர்வலம்: பேருந்துகள், கார்கள், அலங்கார ஓவிய பேனர்கள் வரைந்த பட ஊர்வலம் நீண்டு சென்றபடியே இருந்தன! ஊர்வல அணிகள் மாண்புகள் சென்னை மாநகரில் அண்ணாசாலையிலே தற்போதும், வானளாவி நின்றுகொண்டிருக்கும் எல்.ஐ.சி. கட்டிடம் அருகேயுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா என்ற கட்டிடத்திலே நின்றுகொண்டு, தலைவர்காமராஜர் தனது மணிவிழாஊர்வலத்தின் மாண்புகளைக் கவனித்துக் களித்துக் கொண்டிருந்தார். கரகாட்டம், புலிவேட ஆட்டங்கள், தீப்பந்த சுழற்சிகளின் கோலாகலங்கள், சிலம்பாட்டங்கள், புரவிக்கலைஞர்ஆட்டங்கள், மாணவரணிகளின் அணிவகுப்புகள், மங்கையர்குல கண்கவர் அணிவரிசைகள், காங்கிரஸ் தொண்டர்களின் கொடியேந்திய ஆர்ப்பாட்ட, ஆனந்த முழக்கங்கள், சைக்கிள் அணிவகுப்புகள், அலங்காரம் செய்யப்பட்டலாரிகள், ஜீப்களில் காமராஜர்நாட்டுக்குச்