பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 381 செய்த சேவைகளின் ஒவியங்கள், மூவண்ணக் கொடியேந்திய காலாட்படைகளின் தோற்றப் பொலிவு, சீருடை அணிந்த சிறுவர்களின் எழிலார்ந்த காட்சி, பள்ளி ஆசிரியர்களின் வீறு நடை எல்லாம் நடைபெற்றன. ஒருமுகமாகச் சிலமணி நேரம் அணிவகுப்புச் சென்ற மாட்சியைக் கண்டு வியந்தார். தலைவர் காமராஜர் வாழ்க’ என்ற முழக்கத்தால் மண்ணதிர்ந்தது. விண்ணும்கூட அதிர்ந்தது என்றால் மிகையல்ல. வண்ண வண்ண போஸ்டர்கள் ஒட்டிய போர்டுகளை ஏந்திய மக்கள் காட்சியைக் கண்ட தலைவர் காமராஜர், இந்த மக்களுக்கு நாம் என்ன செய்தோம்? இனிமேல்தான் என்ன செய்யப் போகின்றோம் ? இப்படிப்பட்ட அன்பை நம் மீது வைத்திருக்கின்றார்களே - ஏன்? எப்படி இந்த ஏழை மக்களை வாழவைக்கப் போகின்றேன்? என்று தமக்குள்ளேயே எண்ணிக் கவலையே அடைந்திருப்பார். அவ்வளவு இளகிய குழந்தை மனம் அவருக்கு. சென்னை திருமலைப்பிள்ளை வீதியிலே உள்ள பெருந்தலைவர் காமராஜர் இல்லத்திலே காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் குழுமினார்கள். அன்றிரவெல்லாம் தலைவரைக் கான வந்து போகும் கூட்டத்தினர்.அனைவரும், மணிவிழாக்காட்சிகளின் அருமை, பெருமைகளைப் பற்றியே பேசினார்கள்-மகிழ்ந்தார்கள். ASAAAAS AAASASAS A SAS AAAeAAA AAAAS AAAAAA “