பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50) காமராஜர் புத்தரானார்ஆட்சியைத் துறந்ததால்! தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியால், தலைவர் காமராஜரின் அரசியல் பலத்தையே மீறுவது போன்ற நிலை உருவாயிற்று காமராஜர்அவர்களுக்கு அது பெருத்த கவலைக்குரிய சிந்தனையைத் தூண்டிற்று. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், தமிழ்நாட்டைப் போலவே காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. பலத்த பதவிப்போட்டி, சர்ச்சைகள், காங்கிரஸ் கட்சியிலே பலப்பல அணிகளை உருவாக்கி வந்தன. காங்கிரஸ் கட்சிக்கு அந்தந்த மாநிலத் தேர்தல்களிலும், இடைத்தேர்தல்களிலும் அடிக்கடி தோல் விகள் ஏற்பட்டு எதிர்க்கட்சிகள் வெற்றியை ஈட்டிடும் வாய்ப்பு அதிகரித்தது. ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவரும் தொண்டர்களும், பதவிகளெனும் அதிகாரத் தேரைச் சுற்றிச்சுற்றி அவரவர் பக்கம் உள்ள அணிகளின் வடங்களை நேரெதிர் முகங்களாக இழுக்க ஆரம்பித்தார்கள்! அந்த வடங்களை இழுக்கக்கூட அவர்களுக்குள்ளேயே போட்டி பொறாமை தடைக் கல்லாக் குறுக்கே வந்து விழுந்தன. தகராறுகள், குழப்பம், அடிதடிகள், சண்டை சச்சரவுகள், அறிக்கைப் போர்கள், அணி மோதல்கள் நாளும் அதிகமாக வளர்ந்தன! மாநிலங்கள் தோறும் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சிகள் பெரிய பெரிய ஊழல்களைத் தங்களது தோள்களிலே கட்சிக் காவடிகளாகச் சுமந்துகொண்டு தள்ளாடித் தள்ளாடி டில்லி சந்நிதானம் நோக்கி நேருவுக்கு அரோகராவென்ற ஒசையுடன் பவனிவர ஆரம்பித்தார்கள். அப்படியும் அவர்களால் தள்ளாட முடியாமல், அவரவர்கட்சித் தகுதிகள் என்ற மேடுபள்ளங்களிலே தடுமாறி விழுந்து எழுந்து, திணறி - திண்டாடி, அவமானங்கள் என்ற படுகாயங்களோடு டில் லி தலைமை நிலைய மருத்துவமனையிலே சென்று சிகிச்சையும் பெற்றார்கள்.