பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 383 அந்தக் காயங்களால் உருவான கட்சியின்தேகத் தழும்புகளால் கூடுமான வரை மாவட்டத் தகுதி படைத்த முக்கிய தலைவர்கள் எல்லாம் தத்தமது அரசியல் தகுதிப்பொலிவை இழந்தார்கள். பிரதமர் நேருவின் முயற்சிகள் வீணாயின டில்லி நோக்கி வந்த பதவி நோயாளிகளுக்கும் - ஊழல் பஜனைப்பிணியர்களுக்கும் பிரதமர் நேரு எவ்வளவோ அறிவுரைச் சிகிச்சைகளை வழங்கிப் பார்த்தார். அதனால், பிரதமர் நேரு தீராத மனநோயாளியானார் இந்த நோயைக் கட்சிக்குள்ளே எவ்வாறு நீக்குவது,போக்குவது என்று ஓயாமல் சிந்தித்து, சிந்தித்து, அந்தச் சிந்தனைகளால் அவர் அடிக்கடி தாக்கப்பட்டதால், அவர் உண்மையிலேயே உடல் நலிவையும், மன நலிவையும் அடைந்து தனது தோற்றப்பொலிவையும் இழந்தார். இருந்தாலும், பிரதமர் அல்லவா? திணறியபடியே மத்திய ஆட்சியை நடத்தி வந்தார். வயதேற்றம் வேறு அவரை வாட்டியது! பிரதமர் நேரு அவர்களுக்கு இந்த பலவீன உடல் நிலை தோன்றிடக் காரணம் யாது? அவரேதான்! இது எப்படி? உலக வரலாறுகளையெல்லாம் உன்னதமாக எழுதிய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், நமது நாட்டின் சமுதாய, இன, நிலைகளையும், மக்களின் அறியாமை உணர்வுகளையும் ஆழ்ந்து நோக்க மறந்தார்; மறந்தார் என்பதைவிட தவறினார் என்றே கூறலாம் - பாவம்! அவர் மேலைநாடுகளில்வளர்ந்து, உயர்ந்து வாழ்ந்து வரும் இலட்சிய உணர்வுகளுக்கு நமது நாட்டையும் நடைபோட வைக்க ஆசைப்பட்டார். ஜனநாயகம் என்ற மக்களாட்சித் தத்துவம், மேலைநாடுகளிலே கோலோச்சி வருவதைக் கண்ட ஆசிய ஜோதி பெருமகனார், அதே தத்துவத்தை, மக்களாட்சியை, தனக்குள்ள நல்லாசையால் நமது இந்தியாவிலே அடிப்படையான ஒரு மக்கள் மனக் கல்வித் தளம் அமைக்காமல் திணித்து விட்டார்: அந்த அற்புத மக்களாட்சித்தத்துவத்தைக்காங்கிரஸ் கட்சியாலும் அதற்குப் பின்னாலே வந்த கட்சித் தலைமுறைகளாலும் நன்கு ஜீரணிக்க முடியுமா? என்பதைச்சற்று நிதானிக்கத் தவறினார்: மேலை நாடுகளிலே வாழும் மக்கள் கல்வியறிவுள்ள மக்கள்! அறிவியல் வளர்ச்சியில் மேன்மை பெற்ற மக்கள் அற்புதக் கண்டுபிடிப்புகளைக் காணுமளவிற்கு கல்வி ஆய்வு நுட்பமுள்ளவர்களாகத் திகழ்ந்தவர்கள்! நமது நாட்டு மக்கள் 100க்கு