பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 தேசியத் தலைவர் காமராஜர் 10பேர்கூட கல்வி அறிவு பெறாதவர்களாக இருந்தார்கள் மூட நம்பிக்கைகளும் - பக்குவப்பட முடியாத பரம்பரைப் புராணப் பித்துக்களும் கொண்டு, அறியாமையில் அவதிப்படும் நாடு இது என்பதையும் நேரு மறந்தார். தேர்தல் வந்தால், அதன் அருமையும் பெருமையும் தெரியாத காரணத்தால், வாக்குகளை விலைக்கு விற்கும் நாடு நமது பாரதநாடு தேர்தலன்று முன் நாளிரவு, வேட் பாளர்கள் அணி, முக்காடு போட்டுக்கொண்டு வீட்டுக்கு வீடு வாக்குகளை விலைக்கு வாங்கும் நாடு இது. இன்றும் கூடத்தான் இந்த இழிநிலை! இந்தப் பாப அறிவு பெற்ற பாரதத்தைப் பக்குவப் படுத்தாமல், பிரதமர் நேரு அவர்கள்; அற்புமான தத்துவமான ஜனநாயக தத்துவத்தை ஆசையோடு வலிய வலியப் புகுத்தியதால்தான், காங்கிரஸ்காரர்களின் ஊழல் நோய்க் கிருமிகள், பதவிபிடிக் சண்டைக் கிருமிகள், பாரிச வாயுவாக அவருடைய உடலிலே ஊடுருவிக்கைகால்களை வீழ்த்தி விட்டன: வரம்பு மீறிய அவ்வளவு தொல்லைகளை காங்கிரஸ் அரசியல் வாதிகள் அவருக்கு உருவாக்கியதால்தான், அவர்மரணப்படுகுழியிலே காலிடறி வீழும் நிலை ஏற்பட்டது. மனக்கவலைகளுக்கு மருந்து உண்டா என்ன? காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற என்ன வழி? தலைவர் காமராஜர் அவர்களும், எந்தெந்த மாநிலங்களிலே என்னென்ன நடக்கிறது என்பதை நன்கு புரிந்து கொண்டார். நேரு அவர்கள் படும் கட்சி மனவேதனைகளையும், அவருக்கு வடநாட்டுக் காங்கிரஸ்காரர்கள் தரும் தீராத தொல்லைகளையும், அதனால், அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கம் ஏற்கும் களங்கக் கறைகளையும் கண்டு தலைவர் காமராஜரும் கடும் வேதனைப்பட்டார்: தமிழகத்தின்முதலமைச்சர் பணியை, பார்உள்ளளவும் - பாரில் எழும் கதிரவன் உள்ளளவும் அனுபவிப்போம் என்று நினைத்தவர் அல்லர் காமராஜ் அவர்கள்! இந்தப் பதவியை வகிப்பதால், ஏழை மக்களை அடிக்கடிசந்திக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் அவருக்கு எழலாயிற்று! என்றாலும், தொடர்ந்து மக்கட்பணிகளிலே ஈடுபட்டார் காமராஜர் சளைக்காது பணியாற்றினார்: முதலமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, மீண்டும் தமிழகக் காங்கிரஸ் கட்சிப் பணிகளைச் செய்தால்தான், எதிரிகளிடமிருந்து